Kadan Theera Abirami Anthathi - Abirami Anthathi Meaning in Tamil - Abirami Anthathi Lyrics in Tamil - Abirami Anthathi Miracles - Abirami Anthathi Benefits
அபிராமி அந்தாதி பாராயணம்:
அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம்.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்:
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல் - அபிராமி அந்தாதியின் 54 ஆவது பாடல் - அபிராமி அந்தாதி 54 ஆவது பாடல்
கடன் தீர அபிராமி அந்தாதி: அபிராமி அந்தாதி 54 வது பாடல் -
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர்தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
செல்வம் இல்லாமையைச் சொல்லிக் கொண்டு முன்பின் தெரியாத ஒருவரிடமோ அல்லது கடன் கேட்பதால் முன்பின் தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் நட்பு /உறவினரிடமோ உதவி கேட்டு அவமான பட்டு நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால், எப்போதும் பெருமை மிக்க தவத்தை செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற இது போல் கயவர்களிடம் எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை ஏற்படுத்தாத மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்.
தொடர்ந்து 48 நாட்கள் நாம் பாராயணம் செய்து வரும்போதே கடன் பிரச்சனைக்கான ஒரு நல்ல தீர்வும் உங்களுக்கு கிடைத்துவிடும். பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விட்டாலும் தொடர்ந்து 90 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி. இந்த அபிராமி அந்தாதியின் 54 வது பாடலை பாராயணம் செய்வதன் மூலம் கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமும், நம்பிக்கையும் நமக்கு அதிகரிப்பதுடன், நல்ல தீர்வும் விரைவில் கிட்டும்.
ThumbnailIn=mage credit to the artist who has drawn this beautiful painting - Mr. Velan. Thank you.
#aalayamselveer #abiramianthathi #kadantheera