துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை ஏர்போர்ட் சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
ஜாம்பியா நாட்டு இளம் பெண் ஒருவர் ஆப்பிரிக்க நாடான செனகல்லில் இருந்து சுற்றுலா விசாவில் வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தனி அறையில் அழைத்து சென்று சோதித்தனர்.
உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலில் 460 கிராம் கொகைன் போதைப்பொருள் இருந்தது. அயன் திரைப்படத்தில் வருவது போல், போதை கேப்சூல்களை விழுங்கி வந்திருந்தது ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிற்றில் இருந்து அவற்றை வெளியே எடுத்தனர். 12 கேப்சூல்களில் 150 கிராம் கொகைன் இருந்தது. மொத்தம் 610 கிராம் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 6.1 கோடி ரூபாய்.
ஜாம்பியா பெண் கைது செய்யப்பட்டார். அவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அது பற்றி விசாரணை நடக்கிறது.
இதே போல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ஆண் பயணி மீது அதிகாரிகள் சந்தேகம் வந்தது.
மோப்ப நாய் மூலம் அவரது உடமைகளை பரிசோதித்தபோது, 1 கிலோ 816 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அதன் மதிப்பு சுமார் 1.9 கோடி ரூபாய். அந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார்.#airportraid #dinamalar