அடுத்தவரது சொத்தை 12 வருடத்திற்கு மேலாக அனுபவித்து இருந்தால் அது நமக்கு சொந்தமாகும்! - எப்படி? காலவரையறை சட்டம் 1963, பிரிவுகள் 64 & 65ன் படி அதற்கான விதிமுறைகள் குறித்த விரிவான விளக்கம்.
யூ.டி.ஆர். பட்டா கொடுப்பதற்கு ஏற்படுத்திய வழிமுறைகள் டவுன் லோடு செய்து கொள்வதற்கான லின்க்
https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta.html?lan=en
1. கால வரையரை சட்டம் (#Limitation_Act) பிரிவு 65ன்படி ஒருவர் தன்னுடைய சொத்தை 12 ஆண்டுகளுக்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் தவறினால் காலவறையரை சட்டம் பிரிவு 27ன் படி அவருக்கு சொத்துரிமை அற்று விடும் என்றும் 12 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் செய்பவர் அந்த சொத்தில் எதிரிடை அனுபவ பாத்தியம் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் #சிவில் அப்பீல் எண் 7764/2014 தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
2. வருவாய் நிலையாணை 31ல், பிரிவு 7ல், 12 ஆண்டுகள் ஊர் அறிய சொந்த இடம் போல் அனுபவம் செய்வதாக மொய்பிப்பவர்களுக்கு #பட்டா வழங்கலாம் என்று தெரிவிக்கிறது
3. அரசு #புறம்போக்கு (#Poromboke) நிலத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து அனுபவம் செய்தால் அவருக்கு உரிமை என்றுள்ளது.