இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் 'வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.
கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார் . இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மோகன் என்ற பெயருடன் கிழக்கே போகும் ரயில் (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கமான தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற தெலுங்கு படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்கு பதிப்பை பாபு இயக்கியுள்ளார் . அதன்பிறகு இயக்குனர் மகேந்திரன் இவரை நெஞ்சத்தை கிள்ளாதே தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் ஓராண்டு ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது .இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் (1982) பெற்றார். இதனால் தமிழில் பெரிய நடிகரானார்.
#trending #shortfeed #shortsvideo #shortsfeed #shortsviral #shortsyoutube #shortvideo #shots #Shorts
இவர் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானவர். இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவரின் தொழில் வாழ்க்கையில் விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டை வால் குருவி (1987), மற்றும் சகாதேவன் மகாதேவன் (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.
கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு இயக்குனர் மணி ரத்தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் 80 களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும் பேசப்படுகிறார்.