MENU

Fun & Interesting

அகரம் இப்போ சிகரம் ஆச்சு | சிகரம் | Agaram Ippo Sigaram | Sigaram | K J Yesudas | Vijay Musicals

Tamil Film Songs 15,953,292 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

Song : Agaram Ippo Sigaram Aachu - Lyrical Video
Film : Sigaram
Singer : K J Yesudas
Lyrics : Vairamuthu
Music : S P Balasubrahmanyam
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#yesudas #vijaymusicals #tamilfilmsongs

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு - பாடல்வரிகள்
திரைப்படம் : சிகரம்
குரலிசை : K J யேசுதாஸ்
கவியாக்கம் : வைரமுத்து
இசை : S P பாலசுப்ரமணியம்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

Listen & Stream Sigaram songs on

Spotify : https://spoti.fi/3CBNroh
Jio Saavn : https://bit.ly/3fym9Wy
Wynk : https://bit.ly/3yjBAbT
Apple Music : https://apple.co/3EfM9As
Gaana :https://bit.ly/3fEah5v
Amazon Music : https://amzn.to/3MnmtUJ

பாடல்வரிகள் :

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சன்னிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தாலென்ன
கடுங்கோடை வந்தாலென்ன

மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்

காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன

பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை

வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்

ஊடல்கள் எல்லாம்
தேடல்கள் தானே

பசியார பார்வை போதும்
பரிமாற வார்தை போதும்

கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்

தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்கை உள்ளது

Comment