#Partnership தமிழகத்தில், தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கும் முதல்வர் ஸ்டாலின், மும்மொழிக் கொள்கை எனக்கூறி மத்திய அரசு ஹிந்தியை திணிக்க பார்க்கிறது என எதிர்க்கிறார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் திமுகவினர் இறங்கி உள்ளனர்.
மும்மொழி கொள்கையில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்பதை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார்.
தேசிய கல்விக்கொள்கை தாய்மொழி வழியில் கல்வி கற்க ஊக்கப்படுத்துகிறது. ஆந்திராவில் இதற்கு முந்தைய அரசு ஆங்கிலம் தான் வாழ்வாதாரத்திற்கான மொழி என்று வளர்த்தது.
மொழி என்பது தகவல் தொடர்புக்குதான். ஆனால், அறிவு தாய்மொழியில் கற்ப்பிக்கப்பட வேண்டும்.
தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் கூட, உலகளவில் மிகப்பெரிய அளவில் சதித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன?
அறிவு வேறு, மொழி வேறு, ஆந்திரா பல்கலைக்கழகங்களில் 3 மொழிகள் அல்ல, வெளிநாட்டு மொழிகள் உட்பட 10 மொழிகளை கற்க ஊக்குவிக்க உள்ளோம். அதன் மூலம் உலகளாவிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தெலுங்கு, ஆங்கிலத்துடன் இந்தியும் படிப்பது நல்லது. இந்திய மக்களிடம் எளிதாக பழக ஹிந்தி உதவும். அதில் எந்த தவறும் இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.#ChandraBabu #threelanguagepolicyissue #mkstatlin #dinamalar