Arapaleeswarar Temple Kolli Malai - Google Map Link https://goo.gl/maps/TLTxXsZAexw5uSYz5
கொல்லிமலை பல்வேறு மர்மங்ககளும், அதிசயங்களும் நிறைந்த ஒரு இடமாக அறியப்படுகிறது. இங்கு தான் மிகவும் பழமையான சக்தி வாய்ந்த அறப்பளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இது சுமார் 1500 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவிலாகும், இக்கோவில் அன்பர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று தரிசித்து அருள்பெறவேண்டிய ஒரு முக்கிய திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு பல்வேறு பெருமைகள் உள்ளது, அதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போறோம். 18 சித்தர்களும் அறப்பளீஸ்வரர் திருக்கோவிலில் வழிபட்டதாக ஐதீகம்.
இக்கோவிலில் வேறு எங்கும் காணமுடியாத மிகவும் பழமையான அதிசய குறி சொல்லும் கல்ஒன்று உள்ளது, அடி கல், மேல் கல் என்று இரண்டு பாகமாக இருக்கும் இந்த கல்லின் மீது முதலில் நமது வலது கையை அழுத்தம் இல்லாமல் கல்லின் மேலே வைத்து பின்னர் நமது இடது கையை நமது வலது கையின் மீது வைத்து ஏதேனும் ஒரு காரியத்தை நினைத்து கொண்டு வேண்டிக்கொள்ளவேண்டும் சிறிது நேரத்தில் அந்த கல் அசைந்தால் நாம் நினைத்த காரியம் வெற்றிபெறும் என்பது பன்னெடுங்காலமாக உள்ள ஐதீகம்.
இக்கோவிலின் அடுத்த அதிசயம், இங்குள்ள ஒரே கல்லால் ஆன அஷ்டலட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீ சக்கர மகா மேரு, இது அம்பாள் சன்னதியின் வெளியில் மேல் கூரையில் பொறிக்கப்பட்டுள்ளது, இதன் நேர் கீழே அமர்ந்து நாம் நினைத்து வேண்டும் காரியம் 48 நாட்களில் கைகூடும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கொல்லிமலை கோவில், கொல்லிமலை கோயில்கள், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில், கொல்லிமலை ரகசியம், கொல்லிமலை சிவன் கோவில்,
கொல்லிமலை மர்மம், கொல்லிமலை மர்மங்கள், Arapaleeswarar temple Kolli Malai, Kollimalai Marmam.
Arapaleeswarar Temple Kolli Malai - Google Map Link https://goo.gl/maps/TLTxXsZAexw5uSYz5
#aalayamselveer #arapaleeswarartemple #kollimalai