வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து