#Ayyaramalai #kulithalai #bharathmedias
அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் 8.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.
இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
Google Map
https://maps.app.goo.gl/q6pUH76uL1TsXa7S8
மூலவர் சுயம்பு மூர்த்தி.
கோயில், மலைமேல் 1,178 அடி மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1117 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
மூன்று தலங்கள்
காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர்.
தரிசன நேரம்:
காலை 6AM-11 மணி வரை மாலை 4PM- 8 மணி வரை.
முகவரி:
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில்,
அய்யர்மலை, குளித்தலை,
சிவாயம் அஞ்சல் 639 120,
வைகை நல்லூர் வழி. கரூர் மாவட்டம்.
தொலைபேசி எண்: +91-4323-245-522.
***************************************************************************************************
Othimalai Murugan Temple | ஓதிமலை முருகன் கோவில் வரலாறு
https://youtu.be/8FyKTrf2pjY
Nandha Gopalasamy Hills Pollachi * ஶ்ரீ நந்தகோபால் சுவாமி மலை *
https://youtu.be/z3Phbo6M2Oc
Thogaimalai | தோகைமலை | Coimbatore
https://youtu.be/wdAKy2-KITc
Malai Karuppasamy Kovil Anthiyur | கருப்பண்ண சாமி வரலாறு |
https://youtu.be/cKoaI7TqDPU
***************************************************************************************************
FOR MORE VIDEOS, PLEASE SUBSCRIBE US:
http://bit.ly/2nJtRzi
https://goo.gl/NqVVCg
FACEBOOK
https://www.facebook.com/divinemedias/
INSTAGRAM
https://www.instagram.com/bharathmedias/
Music:
https://shorturl.at/dzIS5
DISCLAIMER:
This Channel Bharath Medias DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by this Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.