MENU

Fun & Interesting

Balaramayanam

Kavi Kannan 2,962 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

#kavikannan #ramayana
Balaramayanam is a small offering to Srirama in simple Tamil verses.

Bālarāmāyaṇam
Lyrics : Sri Kavi Kannan
Vocals : Gayathri Venkatesh

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய ஸீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய ஸீதாராம்

1. அயோத்தி மன்னன் தசரதன் மகனாய் அவதரித்த வீரன்
அஸ்த்ர ஶஸ்த்ர வில் வித்தைகளிலே அசகாய சூரன்

2. கானில் கெளசிகன் செய்த வேள்வியைக் காத்தருளிய பாலன்
வானவர் மானவர் வியந்திட அகலிகை சாபம் தீர்த்திட்ட சீலன்

3. முனிவரைத் தொடர்ந்து மிதிலையை அடைந்து வில்லினை முறித்தானே
கனிவுடன் வைதேஹி கைத்தலம் பற்றியே கடிமணம் புரிந்தானே

4. பார்கவ ராமன் வில்லினை வளைத்துபுகழ் பெற்ற தீரன்
கார்முகில் வண்ணன் அயோத்தி நகரில் களிப்புடன் வசித்த குமாரன்

5. தந்தை வாக்ய பரிபாலனம் புரிய தருவனத்துள் வந்தான்
தம்பி பரதன் தாளினைப் பணிந்திட தன் திருவடி தந்தான்.

6. அன்புடை குஹனின் பணிவிடை ஏற்று அகம் குளிர்ந்து நெகிழ்ந்தான்
அவனது ஓடம் தனிலே ஏறி அக்கரை செர்ந்து மகிழ்ந்தான்.

7. பரிவுடன் இலக்குவன் பணிவிடை புரிய பஞ்சவடியில் வசித்தான்
அரியதாம் இயற்கை காட்சிகள் அனைத்தும் அகம்குளிர ரசித்தான்.

8. அரக்கி சூர்ப்பனகை அவமானப்பட்டு அலறி ஓடச் செய்தான்
அவள் அண்ணன்பக கரதூஷணர்களை அமரில் மாயவைத்தான்

9. காகமாய் வந்து ஊறுகள் செய்த கயவனின் கண் பறித்தான்
யோகியர் பலரும் போற்றிட வனத்தே அருள்மழைதனைப் பொழிந்தான்

10. மாயமான் வடிவமாகவே வந்த மாரீசனைக் கொன்றான்
மங்கை சீதையை லங்கை ராவணன் மறைந்து தூக்கிச் சென்றான்

11. தேவியைப் பிரிந்த துயரம் மிகவே துவண்டு கலங்கி நின்றான்
தேறுதல் பலவும் தம்பியும் கூறிட திடம் சிறிது கொண்டான்

12. சபரியைக் கண்டு தரிசனம் தந்து சந்தோஷந்தனை அடைந்தான்
அபரிமித அன்பினைப் பொழிந்தே அவ்வுலகெய்திடச் செய்தான்

13. வாலியைக் கொன்று சுக்ரீவனையே வலுவில் நேசம் கொண்டான்
வாயுகுமாரன் அனுமன் உதவியால் வைதேஹி இருப்பிடம் கண்டான்

14. அலை கடல் மீதொரு அழகிய பாலம் அமைப்பதில் முயன்று வென்றான்
நலந்தரும் முனிவரும் தேவரும் வாழ்த்திட நாயகன் போரிடச் சென்றான்

15. எதிரியின் தம்பி விபீஷணனையும் ஏற்று அபயம் தந்தான்
புதிரென விளங்கிய மேக நாதனைப் பொழுதினில் மாய்ந்திடச் செய்தான்

16. அவனியர் துயரம் அகற்றிட ரகுவரன் அமரினில் வில்லேந்தி நின்றான்
எவருக்கும் அஞ்சாத் தசமுகன்தனையே எமனுக்கு இரை தந்தான்.

17. கணவன் சந்தேகம் தீரவே சீதையும் கனலில் மூழ்கி எழுந்தாள்
கற்பின் அணிகலன் என்றே அனைவரும் கணமும் பொற்றி மகிழந்தார்

18. அயோத்தி திரும்பி பரதனைக் கண்டு ஆனந்தம் கொண்டான்
அவனிச்சைப்படி பட்டம் தரித்து அரசு புரிந்து வந்தான்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய ஸீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய ஸீதாராம்

Comment