#Partnership பாஜ இளைஞரணி
தேசிய தலைவராக
இருப்பவர் தேஜஸ்வி சூர்யா.
பெங்களூரு தெற்கு தொகுதி
எம்பி.யாக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தேஜஸ்வி சூர்யாவுக்கும்,
சென்னையைச் சேர்ந்த பிரபல
கர்நாடக இசை பாடகி
சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்துக்கும்
பெங்களூருவில் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இன்று பெங்களூருவில்
திருமணம் எளிய முறையில்
நடந்தது.
குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள்
மற்றும் ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமண விழாவில்
கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் சோமண்ணா,
தமிழக பாஜ தலைவர் அ்ண்ணாமலை,
பா.ஜ தேசிய பொதுச்செயலாளர்
சந்தோஷ், கர்நாடக பாஜ தலைவர்
பிஓய் விஜேந்திரா,
பெங்களூரு எம்.பி. மஞ்சுநாத்,
அமித் மாளவியா போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.#Tejasvi #surya #singer #dancer #sivasri #skandaprasad #marriage