MENU

Fun & Interesting

Boon-showering Bhagyalakshmi

D.A.Joseph 3,346 2 weeks ago
Video Not Working? Fix It Now

D.A.Joseph quotes from several Alwar Pasurams to prove the benevolent donorship of Goddess Mahalakshmi. பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு 2) அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே பெருமாள் திருமொழி 2-10- குலசேகர ஆழ்வார் (667) அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம் எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம் கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன் சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே. திருசந்த விருத்தம் – 91 பாசுரம் – திருமழிசை ஆழ்வார் (842) பண்ணுலாவு மென்மொழிப்ப டைத்தடங்க ணாள்பொருட்டு எண்ணிலாவ ரக்கரைநெ ருப்பினால்நெ ருக்கினாய் கண்ணலாலொர் கண்ணிலேன்க லந்தசுற்றம் மற்றிலேன் எண்ணிலாத மாயநின்னை யென்னுள்நீக்க லென்றுமே. திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல், தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்fசரணமேசரணமென்றிருந்தேன், தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்., நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.9 திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்* என்னாழி வண்ணன்பா லின்று அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான், உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும் பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம், திகழும் திருமார்வன் தான். வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன், அடித்தா மரையாம் அலர்.

Comment