மரம் சார்ந்த விவசாயத்தை எல்லா விவசாய நிலங்களிலும் செய்ய முடியும். எந்த விதமான பயிர்கள் சாகுபடியில் இருந்தாலும் வேலி ஒரங்களில் மரங்களை நடவு செய்ய முடியும், உயிர் வேலியாகவும் மரங்களை நடலாம், நிலத்தின் நடுவே வரப்பு ஓரங்களில் 2-3 வரிசையில் மரங்களை நடலாம். இதனால் வழக்கமான சாகுபடி குறையாமல் கூடுதல் பலன்களை பெற முடியும்.
வேலியோர மரங்களால் மண்ணில் கரிமச்சத்து அதிகரித்து மண் வளமடையும், மண்ணில் நுண்ணூட்டம் அதிகரிக்கும், தண்ணீர் செலவு குறையும், வெப்பக்காற்று தடுக்கப்பட்டு நிலம் குளிர்ச்சியடையும், பக்கத்து தோட்டத்தின் இரசாயன நஞ்சுகள் காற்றின் மூலமாக வருவது தடுக்கப்படும், பறவைகள் மரங்களில் தங்குவதால் பூச்சி கட்டுப்படும்.
மேலும் இம்மரங்கள் சுற்றுச்சூழலுக்கு பேருதவி செய்வதோடு உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானத்தையும் தரும் என்பதை இக்காணொளியில் காணலாம்.
வருமானம் குறையுமா? - வரப்புகளில் மரங்களால்!
https://youtu.be/KHUc6lt_ZN0
#Trees #Borderplantation #money #Timber #income #farmer #farm #treebasedagriculture #windbreak #Bordercrops #Bordertrees #Timbercrops #Bundtrees #CauveryCalling