MENU

Fun & Interesting

By pass protein_ சினைமாடு மற்றும் கன்று ஈனும் பசுவிற்க்கு ,@deejayfarming8335 .

Video Not Working? Fix It Now

சினை பசுமாட்டிற்கு பிரசவத்திற்கு 21 நாள் முன்பிலிருந்து கர்ப்பப் பை விரிவடைவதால் அதன் அழுத்தம் ரூமன் எனப்படும் பெரிய வயிற்றின் மீது ஏற்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு சுருங்கிய பெரிய வயிறு விரிவடைய 10 நாள் எடுத்துக்கொள்ளும். இந்த காலங்களில் இரை எடுப்பதும் குறைந்து விடும்.பிரசவநேரத்தில் அதிக சத்து தேவைப் படுதால் அதை ஈடு செய்ய கொடுக்க வேண்டிய புரதம் தான் பைபாஸ் பரதம் (Bypass fat ). சோயா பீன் பருப்புகளை நன்றாக வறுத்து பொடி செய்து அடர்தீவனத்துடன் கலந்து கொடுப்பதால் உடனடியாக புரதம் பசுவிற்கு கிடைக்கிறது. 38% பரதம் உள்ள சோயாபீன் வறுத்தபின் 45% முதல் 50% வரை கிடைக்கும். கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், விட்டமின் E, biotin, முதலிய சத்துக்கள் அடங்கி உள்ளன. #bypassprotein #concentratefeed #dryfodder #greenfodder #Deejayfarming

Comment