MENU

Fun & Interesting

அட்டகாசமான டிபன் ரெசிப்பீஸ் | Delicious Tiffin Recipes In Tamil | @HomeCookingTamil

HomeCooking Tamil 158,334 1 year ago
Video Not Working? Fix It Now

அட்டகாசமான டிபன் ரெசிப்பீஸ் | Delicious Tiffin Recipes In Tamil | @HomeCookingTamil #tiffinrecipes #breakfastrecipesintamil #dinnerrecipesintamil #hemasubramanian Chapters: Promo - 00:00 Rava Dosa - 00:24 Aloo Puri - 04:18 Thattu Idly - 07:57 Rava Kichadi - 15:43 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow ரவா தோசை தேவையான பொருட்கள் அரிசி மாவு - 1 கப் ரவை - 1/4 கப் மைதா - 1/4 கப் உப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது சீரகம் - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/2 தேக்கரண்டி தயிர் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பில்லை நறுக்கியது எண்ணெய் செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவா, மைதா, உப்பு, பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும். 2. பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு நறுக்கிய கறிவேப்பில்லை சேர்த்து நன்கு கலக்கவும். 3, அடுத்து தயிர் மற்றும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊறவைக்கவும். 4. தாவாவை சூடு செய்து, எண்ணெய் தடவவும். பின்பு மாவை ஊற்றவும். இதை ஓரத்தில் இருந்து நடு பகுதிக்கு ஊற்றவும். 5. தோசையின் மீது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சுடவும். 6. சுட சுட ரவா தோசை தயார். உருளைக்கிழங்கு பூரி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு மசாலா கலவை செய்ய உருளைக்கிழங்கு - 3 உப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - நறுக்கியது பூரி மாவு செய்ய கோதுமை மாவு - 2 கப் உப்பு - 1/4 தேக்கரண்டி எண்ணெய் வெந்நீர் செய்முறை: 1. மூன்று உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். 2. மசித்த உருளைகிழங்குடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து மசாலா தயார் செய்து கொள்ளவும். 3. கோதுமை மாவுடன் சிறிது உப்பு, சிறிது எண்ணெய், ஒரு கப் உருளை மசாலா சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணீர் ஊற்றி மாவாக பிசைந்து கொள்ளவும். 4. மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும். 5. மாவை சிறு உருண்டைகள் ஆக பிரித்து வைக்கவும். 6. உருண்டைகளை பூரியாக தேய்த்து கொள்ளவும். 7. சூடான எண்ணெயில் மெதுவாக பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும். 8. உங்களுக்கு பிடித்த சைடு டிஷ் உடன் சூடாக பரிமாறவும். தட்டு இட்லி தேவையான பொருட்கள் இட்லி செய்ய உளுந்தம் பருப்பு - 1 கப் இட்லி அரிசி - 4 கப் உப்பு - 1 தேக்கரண்டி இட்லி பொடி செய்ய உளுந்தம் பருப்பு - 1/4 கப் கடலை பருப்பு - 1/4 கப் வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 15 கறிவேப்பில்லை பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி புளி - சிறிதளவு உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும். 2. 6 மணி நேரம் கழித்து ஊறிய உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். 3. அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். 4. இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும். 5. இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். 6. வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும். 7. இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும். 8. அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும். 9. நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 7 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். 10. தட்டு இட்லி மீது நெய்யூற்றி செய்த இட்லி பொடியைத் தூவி சூடாக பரிமாறவும். ரவா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள் ரவா - 1/2 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி முந்திரி பருப்பு (விரும்பினால்) கறிவேப்பிலை வெங்காயம் - 1 நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நறுக்கியது பீன்ஸ் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது கேரட் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது வேகவைத்த பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி தக்காளி - 1 நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி சூடு தண்ணீர் - 1 கப் நெய் - 3 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது Tiffins for us are as exciting as main meals. There are many tiffins which we can make and enjoy. So today, I am going to show you all 4 different varieties of tiffins you can make for breakfast or evening dinners. They are rava dosa, aloo puri, thattu idli and rava khichdi. These are all easily doable instant tiffins. You can also pack them for lunchboxes if you like. So try these and let me know which ones you like the most, in the comments section. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/homecookingt... YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecooking... A Ventuno Production : https://www.ventunotech.com/

Comment