ஸ்ரீ வித்யா பாரம்பரிய விதியின்படி வாழ்வில் அனைத்திலும் வெற்றிபெற தை-1ல் இதை செய்ய தவறாதீர். தவறினால் அடுத்த 6 மாதம் காத்திருக்க வேண்டிவரும்.
உலகியல் வெற்றிக்கு இடகலை
இடகலையின் திசைகள் மேற்கு, தெற்கு. இது பாலில் பெண் பால்.
ஆன்ம நெறி புகுத்தும் பிங்கலை
பிங்கலையின் திசைகள் வடக்கு, கிழக்கு.
இது பாலில் ஆண் பால்.
சரம் பார்ப்பதில் நாள் சரம், நட்சத்திர சரம், திதி சரம், பஞ்சபூத சரம் மற்றும் அயன சரம் என்ற முறைகள் உண்டு. இதில் அயன சரத்தை தவிர மற்ற எல்லா சரங்களும் அடிக்கடி பார்த்து சரிசெய்வது. ஆனால் அயன சரம் மட்டும் வருடத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே பார்க்க முடியும். மேலும் இந்த இரண்டு நாட்களில் சரத்தை சரியாக நடத்திவிட்டால் போதும், வருடத்தில் எல்லா நாட்களிலும் சரம் சரியாக நடக்கும். தை மாதம் முதல் தேதி முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் உத்தராயண காலம் என்று சொல்வர். அயனம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் பகலில் ஒருபொழுது மட்டுமே உணவு உண்டு பரிசுத்தமாக இருந்து மறுநாள் உத்தராயண மாகிய தைமாதம் முதல் தேதி பொழுது விடிவதற்கு முன் ஐந்து நாழிகை இருக்கும்பொழுது சரம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது எந்த நாளாக இருந்தாலும் சரம் இடதுபக்கமாக ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட வேண்டும்.
Don't forget to do this on Jan-15 to Succeed Everything, Everywhere in Life as per SRI VIDYA TRADITION. Otherwise you will have to wait for the next 6 months.
For worldly success - Left nostril breath
The directions of left nostril breaths are West, South. It is feminine power, energy, force.
For Spiritual Success - Bingala (Right Nostril breath)
Pingala (right nostril breath) directions are North, East.
It is masculine power, Energy, Force.
There are methods of viewing the saram which are day, star, tithi, panchabhuta and ayana saram. All saram except the ayana sara are frequently checked and adjusted. But the Ayana Sara alone can be seen only two days a year. And if the sara is performed properly on these two days, the saram will be performed correctly on all days of the year automatically. From the first day of the month of Thai (Magara), the period when the sun moves towards the north is called Uthrayana. On the first day before the start of Ayana, one should eat only one meal during the day and be holy. Next day on the first day of Uttarayan, whatever day it is, the saram (breath) should run to the left side nostril without breaking for five Naligai that two hours when there is five naligai (24 minutes = 1 Naligai) before sunrise.