MENU

Fun & Interesting

ராகவேந்திரா சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா ?| | Dr Acharya Haresh Raman | Raghavendra Valipadu

BAKTHI INFINITY 49,635 lượt xem 9 months ago
Video Not Working? Fix It Now

#hareshraman #bakthiinfinity #ragavendraswamy #astrology #raghavchadha #modi #சுகமே #சூழ்க
#valipadu #thursday

---------------------------------------------------------------------------

ராகவேந்திரா சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா ?| | Dr Acharya Haresh Raman | Raghavendra Valipadu

---------------------------------------------------------------------------
ஸ்ரீ ராகவேந்திர மந்திரம்:

Santhana Sampath Parishuddha Bhakthi,

Vignana Vag Deha Supata Vadhin,

Dathwa Sarerothdha Samastha Doshan,

Hathwa Sa No Avyadh Guru Raghavendra

---------------------------------------------------------------------------



ஸ்ரீ ராகவேந்திர சாமியின் அற்புதங்கள்:
------------------------------ ------------------ ------------------------
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியின் பெல்லாரி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சர்.தாமஸ் மன்றோ.
.
அப்போது -கோயில் நிலங்களின் வருமானம் முழுவதையும் வசூலிக்குமாறும்  வாரிசுகள் இல்லையெனில் நிலங்களைக் கையகப்படுத்துமாறும் பிரிட்டிஷ் அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி பிருந்தாவனம் இருக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக -
தன் குழுவினருடன்  சென்றார் மாவட்ட ஆட்சியர் சர்.தாமஸ் மன்றோ.

இந்த நிலம் ஸ்வாமிகளுக்கு நவாப் சித்தி மசூத்கான் அளித்த காணிக்கை.

நிலத்தைக் கையகப்படுத்த வந்திருக்கும் ஆட்சியரிடம் பேசுவது அறியாது தவித்தனர் - மடாலயத்தினர்.

காலணிகளைக் கழற்றி விட்டு மடாலயத்தினுள் நுழைந்தார் தாமஸ் மன்றோ.


ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தின் முன் நின்ற மன்றோ சற்றைக்கெல்லாம் தானாகவே பேச ஆரம்பித்து விட்டார்.

அவர் முன்பாக ஒளிவடிவாக ஸ்வாமிகள் - பிருந்தாவனத்திலிருந்து தோன்றி அருளினார்.

நிலத்தைப் பற்றிய விளக்கங்களை ஆங்கிலத்தில் அளித்தருளினார்.

அதைக் கேட்டு மன்றோ திருப்தியுற்றார்.

அன்புடன் வணக்கம் செலுத்தி விட்டுத் திரும்பினார்.

அவருடன் சென்றவர்களோ திகைத்தனர். தாமஸ் மன்றோ யாருடன் பேசிக் கொண்டிருக்கின்றார்?

மடாலயத்திலிருந்து வெளியே வந்த மன்றோவிடமே கேட்டனர்.

அவர் சொன்னார் -

காவியுடை அணிந்திருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்..  இந்த நிலம் குறித்த அனைத்து விளக்கங்களையும் அவர் அளித்தார். எனவே - இந்த நிலம் மடாலயத்திற்கே சொந்தமானது என அறிவிக்கின்றேன்.. என்னுடன் பேசிக்கொண்டிருந்த - பெரியவரை நீங்கள் பார்க்கவில்லையா!..

மன்றோ அவர்களே.. அவர் தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்.. அவர் ஜீவசமாதி அடைந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகின்றன.. ஸ்வாமிகளைத் தரிசித்த நீங்கள் பாக்கியசாலிதான்!..

பிரமிப்பின் எல்லையிலிருந்த மன்றோ - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தராகி நின்றார்.

சர். தாமஸ் மன்றோ - அரசு ஆணையினை ரத்து செய்து -
நிலத்தை மடாலயத்திற்கே உடைமையாக்கிய விவரத்தினை அன்றைய ஆங்கிலேய அரசு ஆவணக் குறிப்பாகவும் வெளியிட்டுள்ளது

Dakshina Mantralayam,
Pauparapatty,
Agraharam (P.O)
Dharmapuri District. 636 809.

Moblie No: 9442690225,9443616923,9952336670


---------------------------------------------------------------------------

For Business :
Email : vangapanampannalam@gmail.com

Comment