#Partnership உலகின் உச்ச பணக்காரராக இருப்பவர் அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாகியான மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தல் மூலம் அரசியலிலும் அடியெடுத்து வைத்தார்.
டிரம்ப் வெற்றிக்காக தீவிரமாக இறங்கி வேலை பார்த்தார். பல ஆயிரம் கோடி ரூபாயையும் தேர்தல் செலவுக்காக வாரி வழங்கினார்.
டிரம்ப் அதிபர் ஆனதும், DOGE என்று அழைக்கப்படும் department of government efficiency என்னும் துறையை புதிதாக உருவாக்கினார்.
மொத்த அரசு எந்திரத்தையும் டோட்டலாக சீர்படுத்துவது தான் இந்த துறையின் முக்கிய பணி.
அதிகாரம் மிகுந்த இந்த துறையின் தலைவராக மஸ்கை நியமித்து கைமாறு செய்தார் டிரம்ப்.
அந்த பதவி கைக்கு வந்ததில் இருந்து பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார் மஸ்க்.
என்ன தான் அரசியலில் ஜொலித்தாலும், தொழிலில் கோட்டை விட்டு இருக்கிறார் மஸ்க்.
அவரது அரசியல் என்ட்ரி போதாதகாலமாகி விட்டது. பிசினசில் அடுத்தடுத்து பலத்த அடி விழுந்துள்ளது.
இப்போதும் அவர் தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்றாலும், அவரது சொத்து மதிப்பு சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்து விட்டது.
இன்றைய தினத்தில் அவர் 330 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். அதாவது 28 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து அவரிடம் இருக்கிறது.
ஆனால் கடைசி ஒரு சில வாரங்களில் மட்டும் அவர் 120 பில்லியன் டாலரை இழந்து விட்டார் என்கிறது அதிர்ச்சி ரிப்போர்ட்.
அதாவது 10 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் மஸ்க் கையை விட்டு போய்விட்டது.
இது மஸ்க் கையில் இப்போது இருக்கும் சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை விட கூடுதல்;
இவ்வளவு பணம் தமிழக அரசின் கையில் இருந்தால் மொத்த மாநிலத்துக்கும் சேர்த்து இரண்டரை ஆண்டுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும் என்றால் மஸ்க் எவ்வளவு பெரிய அடியை சந்தித்து இருக்கிறார் என்று பாருங்கள்.
பைடன் பவரில் இருந்த காலத்தில் மஸ்க் வேகமாக வளர்ந்து வந்தார்.
அவரது நெருங்கி நண்பர் டிரம்ப் அதிபர் ஆன பிறகு மஸ்க் அசுர வேகத்தில் முன்னேறி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எல்லாம் தலைகீழாகி விட்டது.
எக்ஸ் தளத்தை நடத்துவதில் அவருக்கு பெரிய பின்னடைவு இல்லை.
ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சவால்களை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்பேஸ் எக்ஸ் செயற்கை கோள் திட்டம் ஒன்று தோல்வி அடைந்தது.
இருப்பினும் அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை கைப்பற்றி ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.#Elon #Musk #crisis #DOGE #Tesla #stock #drop #Trump