ஸ்ரீ பகவத் அவர்கள் தனது பதினெட்டாவது வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்.
இவர் 40 ஆண்டுகளாகக் கடும் முயற்சியை மேற்கொண்டு ஞானத்தைத் தேடினார்.கிடைக்கவில்லை.
அவரது 58 வயதில் திடீரென
ஒரு நாள் ஞானத் தெளிவு
ஏற்பட்டது.
பல வருட முயற்சியில் கிடைக்காத ஞானத் தெளிவு திடீரென்று கிடைத்தபோதும் அவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடவில்லை.
மாறாக ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்.
அரை நொடியில் புரிந்து கொள்ள வேண்டிய இந்த ஞானத்திற்காகவா நாற்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டோம் என்று வியப்புற்றார்.
ஞானம் பெறுவதற்குப் பெருமுயற்சி தேவையில்லை என்பதை அறிந்தார்.
தான் பெற்ற இன்பத்தை - ஞானத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்ற அடிப்படையான உணர்வோடு அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார்.
அரங்கநாதன் M.A.M.Ed.,
தமிழாசிரியர் (ஓய்வு )
திருச்செந்தூர்.