ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ உ.வே விஷ்ணுசித்தன் ஸ்வாமி அருளிய ஸ்ரீ விஷ்ணுபுராணம் 2ஆம் அமசம் உபந்யாச சாரம்.
ஸ்வாமி மங்கள ஶ்லோகங்களோடு தொடங்கி ஸ்ரீவிஷ்ணுபுராணம் எப்படி சித் அசித் ஈஶ்வர தத்வ த்ரய சாரத்தை தெரிவிக்கின்றதுஎன்யதை பற்றியும், நேற்று உபந்யாசத்தை (முதல் அம்சம்) கொஞ்சம் புநஸ்மரணம் சற்று செய்து , அதிலே பூர்வாசார்யர்கள் , அதிலும் விசேஷித்து எம்பெருமானார் முதல் அதிகரணத்திலேயே இந்த புராண ஶ்லோகம் உதாஹரித்தமை பற்றியும், புராண பெருமையும், அதன் வ்யாக்யாதா ஸ்ரீ எங்களாழ்வான் பெருமையும் (விசேஷமான ஸ்ரீநம்பிள்ளை திருவாக்கை உதாஹரிப்பித்து "ஶாஸ்த்ரம் முழுவதும் ஸ்ரீஎங்களாழ்வான் ஒருவருக்குமே போறுமாய்த்து.."), இந்த உபந்யாசமானது ஸ்ரீஎங்களாழ்வான் பெருமையை அருளிச்செய்த ஸ்ரீநம்பிள்ளை லோகாசார்யரின் திருமுற்றத்திலேயே நடக்கும் வைபவத்தையும், அப்பேர்பட்ட மஹத்தை உடைய இதை தாம் உபந்யசிப்பதற்கு அரயதை கொண்டவனல்லேன் என்று நைச்சியம் பாவித்து, என்றாலும் சபை பெரியவர்கள் நியமனத்தின் பேரில் இதை செய்ய கடவோம் என்றும்,
மேலே எப்படி ஆழ்வார் எப்படி அவா பொங்க பொங்க திருவாய்மொழி அருளிச்செய்தாரோ, அப்படி மைத்ரேயர் தூண்ட ஸ்ரீபராசரர் அவா பொங்க இந்த புராணத்தை அருளிச்செய்தார் என்றும், ஒரு நல்ல சிஷ்யன் கிடைத்தால் ஒரு ஆசார்யன் தானே தேனு போல் க்ருபை வர்ஷிப்பன் என்றும், மைத்ரேயர் தாம் ஸர்வ கலைகளையும் தான் ஸ்ரீபராசரரிடத்தில் கற்றமையும், மேலும் தாம் புராண விசேஷத்தையும் அவரிடத்திலே கற்க வேண்டும் என்பதை விண்ணப்பித்து கற்றார் என்பதையும்,
மேலும் இந்த அம்சத்திலே அசித் சிலவற்றை உபதேசக்கும் பொருட்டு, ஸப்த த்வீபங்கள் முதலான ப்ரக்ருதி தத்வங்களையும், ஒவ்வொரு த்வீபத்தின் அதிபதியாக ப்ரியவ்ரதனுடைய புத்ரர்கள் பௌத்ரர்கள் எவ்வாறு ஏற்ப்பட்டர்களென்றும், அந்தந்த கண்டங்கள் வர்ஷங்களில் எவ்வாறு பகவான் ஆராதிக்கப் படுகிறான் என்றும் (சூர்ய மண்டல, சந்த்ர மண்டல, வாயுமண்டல மத்யவர்தியாக) , மற்றும் அண்டத்தின் பரப்பளவு, கடாஹம் என்பது என்ன, ஜ்யோதிஷம் புராணாதிகளில் இடையே உள்ள வேறுபாடு, பூர்வர்களின் பக்ஷம், ஏழு ஆவரணங்களின் இரு வேறு நிர்வாஹங்கள், பூ லோக வர்ணனை,
ஸ்ரீநாரதபகவான் சொன்ன பாதாள லோகத்தின் மஹிமைகன் , எவ்வாறு சூர்ய கிரணங்கள் அங்கு ப்ரவேசம் செய்யும் என்றும் ஆனால் உஷ்ணாதிகள் தாக்கம் இருக்காது என்பது பற்றியும், கீழே அனந்த அவதாரமாக பகவான சயித்திருப்பது பற்றியும், இங்கிருந்தே ஸங்கர்ஷண முர்த்தி அம்சமாக கால ருத்ராவதாரம் செய்து லோக ஸம்ஹாரம் செய்வது பற்றியும், யம லோக வர்ணனை,
மற்றும் பல வித நரகங்கள் வர்ணனை செய்து, "கைங்கர்யத்துக்கு தேவைக்கு அதிகமாக , வத வத என்று துளசியோ புஷ்பங்களையோ பறிக்க கூடாது என்றும், அப்படி செய்தால் "அஸி பத்ரவனம்" (கத்திமுனையுடைய இலை கொண்ட காடு) என்னும் கொடிய நரகம் கிட்டும் என்றும் , க்ருமிகள் நம்மை தின்னும் நரகங்கள், க்ருமிகளை நாம் தின்னும் நரகங்கள், தப்பு சாக்ஷிசொல்பவர்க்குண்டான நரகங்கள், இவை ஏன் (தங்கத்தை காய்ச்ச காய்ச்ச அது சுத்தி ஆகுமா போலே பாபங்கள் கழியக் கழிய ஒரு ஆத்மா பகவான் சமீபம் செல்கிறான்) என்றும், ப்ராயச்சித்தங்கள் ஒருவாறு மட்டுமே போக்கும் என்றும், ப்ரபல ஶ்லோகம " ப்ராயச்சித்தாநி அசேஷாணி...க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்" என்பதே பண்ணின பாபங்களுக்கு ப்ராயச்சித்தமாகவும், மேலும் பாபங்களை செய்ய விடாமல் தடுக்கும் என்றும், நாம் சதா பகவத் நாம குண ஸ்மரணத்திலேயே போது போக்க வேணும் என்ற உபதேசத்தையும், இரண்டொரு ப்ராயச்சித்தங்கள் (க்ருச்ச்ரம்- சாந்த்ராயணம்) அடைவையும், இன்று நாம் க்ருச்ச்ரத்துக்கு பதிலாக வெறுமனே 200ரூ கொடுக்கிறோம் என்று, அதற்கு இது ஈடாகாகுமா என்று விசாரிக்க வேண்டியதையும்,
ஶாஸ்த்ரமானது 1000 மாதாக்களுக்கு சமம் என்பதையும், ஒரு பகவத் பக்தன் ஸ்வர்கத்தைக் கூட பகவத் கைங்கர்யத்துக்கு இடையூறாகவே கருதுவன் என்பது பற்றியும், இவையெல்லாம் ஒருங்கப் பிடித்து சுகம் கொடுப்பது ஸ்வர்கம் துக்கம் கொடுப்பது நரகம் என்று புராண வசநத்தை சுட்டியும், மேலும், எல்லார்க்கும் எல்லாம் எப்போதும் சுகத்தை கொடுக்க மாட்டா ( நமக்கு சர்கரை பொங்கல் சுகம், நாய்க்கு துக்கம், நமக்கே வ்யாதி இருந்தால் துக்கம் என்கிற உவமை காட்டி - இது நேற்றைய ப்ரஹ்லாத சரித்ரத்திலும் வரும்), மேலும் க்ரஹங்கள் பற்றியும் சூர்ய கதி சந்த்ர கதி, எப்படி வைக்கோல் போர் அடிக்கும் பொழுது நடு ஸ்தம்பத்தை சுற்றி மாடுகள் நடக்குமோஅப்படி த்ருவ மண்டலத்தைச் சுற்றி நக்ஷத்ரங்கள் சுற்றும் தன்மை பற்றியும்,
க்ருதகம் (பூ: , புவ:, ஸுவ: என்ற 3 லோகங்கள்) க்ருதகாக்ருதகம் (மஹர் லோகம் ) அக்ருதக லோகங்கள் (ஜந:, தப:, ஸத்யம் என்ற 3 லோகங்கள்) பற்றியும், ஸத்ய லோகத்திலே எப்படி பகவானுக்கும் ருத்ரனுக்கும் வாஸம் உண்டு என்றும் எப்படி ஸத்யலோகத்திலிருப்பவர்கள் ப்ரளயகாலம் வந்தவாறே பரமபதம் அடைகிறார்கள் என்றும், சுர்ய வர்ணனம், அவனுடைய ஆகாரம், எப்படி ஒவ்வொறு பொழுதில் ஒவ்வொறு தேசத்திலே தோன்றுகிறான் மறைகிறான், தோன்றுவது உதயம் என்றும் மறைவது அஸ்தமனம் என்றும், சூர்யன் எப்பொழுதுமே உள்ளான் என்பதையும், உத்தரூயண தக்ஷிணாயனங்கள் பற்றியும், கங்கோத்பத்தி ஆகாச கங்கை ஸ்நாநம் நல்லது என்றும் கேவல மழையில் நனைந்தால் அசுத்தி என்றும் , பரமசிவனார் எப்படி கங்கையை (ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கினான் என்றும்,
இந்த அம்சத்தின் உயிரான பரத, ஜடபரத ரஹூகண ஸம்வாதத்தையும் அதில் ப்ரஸங்காத் வரும் ரிபு நிதாகர் ஸம்வாதங்களையும் விசதமாகவும், எப்படி எல்லாஆத்மாக்களும் ப்ரகாரத்தால்(ஸ்வபாவத்தால்) ஒன்று என்றும் அத்வைதவகைகளையும், ப்ரஸித்தமான புல்லாங்குழல் உவமையையும் (ஒவ்வொரு துளை ஒவ்வொரு சரீரம், காற்று ஒன்றாகிலும் துளைக்கேற்ப சப்தம் மாறுமாப் போலே, சரீரத்திக்கேற்ப மாறுபடும் என்றும்)
ஆசார்ய லக்ஷணத்தையும், எவ்வாறு நாம் ஆசார்யனை அடைவது என்பதையும் பரக்க உபந்யஸித்தார்
மேலும் தமக்கு இவ்வாய்ப்பை நல்கிய சபையாருக்கு நன்றி கூறி அமைந்தார்.
வர்ததாம் அபிவர்ததாம்