பேச்சாளர் பற்றி:
திரு ஆ.பாஸ்கர் அவர்கள் கட்டடக்கலைப் பொறியாளர், தொழிற்சங்கவாதி, நாடகக் கலைஞர் என பன்முகம் கொண்டவர். இதற்கு முன்னர், புதன் வாசகர் வட்டத்தில் “காந்தியும் பகத்சிங்கும்”, “Charka and Rose”, “நிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்”, “ஊர்சுற்றிப் புராணம்”, “பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்”, “பெண் விடுதலை”, “காந்தியைக் கண்டுணர்தல்” , “பாரத ஜன சபை – காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்”, “ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை”, “நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்” , “ஸ்ரீஅரவிந்தரும் மகாத்மா காந்தியும்” “விடுதலைப் போரில் தமிழ் நாடகங்கள்”, “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்” மற்றும் “Nehru and Bose: Parallel Lives” உள்ளிட்ட நூல்களை அறிமுகம் செய்து பேசியுள்ளார்.
நூல் பற்றி:
வ.உ.சி.யும், பாரதியும் தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த இரு பேராளுமைகள். 1906-ஆம் ஆண்டு தொடங்கி மறையும் வரை இருவருக்குமிடையே உணர்வுப்பூர்வமான நட்பு வளர்ந்து செழித்தது. அந்தக் காவிய நட்பை இந்நூல் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்துகிறது. அவ்விரு பேராளுமைகள் குறித்த இதற்கு முன்னர் வெளிவராத ஆவணங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க மற்றும் இடைக்காலங்களில் செயல்பட்ட சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைப் பற்றிய ஆவணங்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதே போன்று, பாரதியைப் பற்றி வ.உ.சி. எழுதியவையும், வ.உ.சி.யைப் பற்றிப் பாரதி எழுதியவையும், அவ்விருவருக்குமிடையே நடந்த விவாதங்களும் இந்நூலில் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அவ்விரு ஆளுமைகளுடனும் நெருங்கிப் பழகிய மண்டபம் ஸ்ரீனிவாச்சாரியார் அவர்கள் அவ்வாளுமைகள் பற்றி எழுதிய நினைவுக் கட்டுரையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. வ.உ.சி. மற்றும் பாரதி ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு அரிய பெட்டகம். இந்நூல், முதன் முதலாக 1994-ஆம் ஆண்டு மக்கள் வெளியீடு மூலமும், அதற்குப் பின்னர் காலச்சுவடு பதிப்பகமும் இந்நூலை வெளியிட்டுள்ளன.
ஆசிரியர் பற்றி:
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் நூலாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்து வருகிறார். மனோன்மணியம் சுந்தரனார் (திருநெல்வேலி), சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியிருக்கிறார். “வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்”, “பின்னி ஆலை வேலை நிறுத்தம்”, “திராவிட இயகமும் வேளாளரும்”, “நாவலும் வாசிப்பும்”, “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” உள்ளிட்ட பல முக்கியமான ஆய்வு நூல்கள் இவரது ஆக்கத்தில் வெளியாகியுள்ளன. அதே போன்று “அண்ணலின் அடிச்சுவட்டில்”, “புதுமைப்பித்தன் கட்டுரைகள்” உள்ளிட்ட பல முக்கிய நூல்களை, எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் இருக்கிறார். மிகச் சமீபமாக ““Swadeshi Steam: A shipping company propelled by patriotism” மிகச் சிறந்த ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி, 2007-ஆம் ஆண்டில் வி.கே.ஆர்.வி. ராவ் விருதும், 2018-ஆம் ஆண்டில் விளக்கு புதுமைப்பித்தன் விருதும், 2021-ஆம் ஆண்டிற்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதும், 2021-2022 - ஆம் ஆண்டுகளில் பாரதியார் விருதும், ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ என்ற நூலுக்காக 2024 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதும இவருக்கு வழங்கப்பட்டது.
காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600017
GANDHI STUDY CENTRE
Thakkar Bapa Vidyalaya Campus,
58, Venkatanarayana Rd,T. Nagar, Chennai, Tamil Nadu 600017
##வஉசி #பாரதி #வேங்கடாசலபதி #காந்திகல்விநிலையம் #gandhistudycentre #விஜயன் #vijayan Check all the videos on the playlist:
.
.
For business inquiry: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCmJJk_Dr6Gk_tE2iHx43Otg/join
Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE
Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS