இன்றும் வாழும் இராவணன் வாரிசுகள் | Gondi tribes and Indus Valley Civilization | SangathamizhanTV
சிந்துசமவெளி நாகரிகம் Playlist: https://youtube.com/playlist?list=PLqLB9hNk1T3ArkU9job1mfBw-b89Pe3zl
பாக்கிஸ்தானில் இருக்கும் தமிழர் நாகரிகம்: https://youtu.be/AYHji1i-st4
பாகிஸ்தானில் தமிழ் ஊர் பெயர்கள்: https://youtu.be/MXmCHuj3Wvg
இன்றும் வாழும் இராவணன் வாரிசுகள்:
சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.
சிந்துவெளி நாகரிகத்துக்கும் இந்தியாவின் மத்திய பகுதியில் வாழும் திராவிட பழங்குடிகளான கோண்டுகளுக்கும் இடையில் ஆச்சரியமான சில கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பசுபதி என்று சேர் ஜோன் மார்ஷலால் கூறப்பட்ட வடிவம் தலையில் அணிந்திருக்கும் எருமைக்கொம்புடனான கிரீடத்தை ஒத்த கிரீடத்தை கோண்டு மக்கள் வழிபடும் அவர்கள் மரபின் முன்னோடி ஞானியான லிங்கோவும் அணிந்துள்ளமை வசீகரிக்கும் உண்மையாகும்.அத்துடன் அவ்வாறான தலைப்பாகையை இன்றும் அவர்கள் தம் கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்துகிறார்கள். மற்றையது மொகெஞ்சதரோ நடன மாது சிற்பத்துக்கும் கோண்டுகளுக்கும் உள்ள ஒற்றுமை.அந்த சிற்பத்தின் சிகை அலங்காரம் இன்றும் கோண்டு பெண்களின் சிகை அலங்காரத்துடன் அதிகவேறுபாடற்று அமைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அண்மையில் கர்நாடக மாநிலம் ஹம்பியிலுள்ள குகை யொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துருக்களை கோண்டு மொழியினூடாக வாசித்துள்ளார்கள் என்ற செய்தி முக்கியமாகின்றது.இதில் உள்ள 19 எழுத்துருக்களில் 11 எழுத்துருக்கள் சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
“On the goddess Kotamma temple woollen market way there is a rocky roof shelter for shepherds and sheep to stay at night up to morning.”
என்ற வாசிப்பு காட்டும் எளிமை மற்றும் நேரடித்தன்மை மனதுக்கு இந்த வாசிப்பு சரியாக இருக்கலாம் என்பதாக ஓர் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
#SangathamizhanTV #IVC #IndusValleyCivilization #சிந்துவெளிநாகரிகம் #GondiTribes #Gondi #KuiGond #Ravanan #Ravan
***************************************************************************************
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q
Email ID: [email protected]
Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV
Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/