ஒரு ஜாதகத்தில் இரண்டு இயங்கு புள்ளிகள் இருக்கு. ஒன்னு லக்னம், இன்னொன்னு ராசி. ஜாதகத்தில் ராசியின் பயன்பாடு என்ன? கோட்சார நிலையில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, மாதப்பலன்கள் ராசியை மையம் வைத்தே சொல்லப்படுவதால் அதை அறிந்து கொள்ள ராசி உதவும். அடுத்து சந்திரன் இருப்பிடத்தை வைத்து நட்சத்திரம் சொல்லப்படுவதால் நட்சத்திரம் அறிந்து ஆலய பரிகாரங்கள் செய்து கொள்ள உதவும். மேலும் ராசியை மையம் வைத்து வரும் யோகப்பலன்களை தெரிந்து கொள்ளவும் ராசியின் பயன்பாடு முக்கியமானது. ஆனால் லக்னம்தான் ஜாதகரின் சகல அம்சங்களையும் அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உதவும். ஆரோக்கியம், பொருளாதாரம், சகோதர உறவுநிலை, சொத்துக்கள் வாகனம் தாயார், குழந்தைகள், நோய், கடன், வழக்குகள், திருமணம், கணவன் மனைவி உறவு, நண்பர்கள் உறவினர்கள், ஆயுள், கண்டங்கள், தகப்பனார் நிலை, பூர்வீகம், தொழில், உத்தியோகம், அதில் வரும் லாபம், விரையம் என இன்னும் சொல்லப்படாத அனைத்தையும் லக்னத்தை முதலாவதாக கொண்டு அடுத்தடுத்து ஆராய்ந்து சொல்ல பயன்படும்.