MENU

Fun & Interesting

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Amutham Music 378,170 5 years ago
Video Not Working? Fix It Now

Idarinum Thalarinum - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : O S Arun | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music இடரினும் தளரினும் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : O S அருண் | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக் பாடல்வரிகள் : இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே நமசிவாய நமசிவாய செல்வம் பெருகவே நமசிவாய நமசிவாய செல்வம் பெருகவே செல்வம் பெருகிட நாளும் சொல்வோம் நமசிவாய தேவாரத்தை பாடி வருவோம் நமசிவாய நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே கையது வீழினுங் கழிவுறினுஞ் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி) ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார். தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார். எண்ணரிய சிவஞானத் தின்ன முதங்குழைத் தருளி உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணமளித் தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கண்ணார் அருள்புரிந்தார். For Music Streming & Downloads Apple Music : https://music.apple.com/in/album/palan-tharum-pathikangal/459012099 Spotyfy : https://open.spotify.com/album/3tNb0PjoEmteqDJ6elxjxA?si=hDZxG0CARxC5euyZ1touuA Amazon Prine Music : https://music.amazon.in/albums/B005HMIMDS?ref=dm_sh_891f-3862-647d-5bd2-cfe3d Jiosavan : https://www.jiosaavn.com/album/palan-tharum-pathikangal/zvHx9A0po1c_ Wynk Music : https://wynk.in/music/album/palan-tharum-pathikangal/si_3698 Google Play Store : https://play.google.com/store/music/album/VeerAmani_Kannan_Palan_Tharum_Pathikangal?id=Bckjjnmmutzhadwowp5tnofb3vu&hl=en For More Videos: https://www.youtube.com/c/AmuthamMusic Facebook : https://www.facebook.com/amuthammusicofficial #Palantharumpthiganagal#osarun#bombaysaradha Amuthammusic#lordsiva#thevaram

Comment