MENU

Fun & Interesting

Ilangai Jeyaraj - Vaan Sirappu - PARMEL AZHAGAR URAI - FULL VIDEO

AGK MUSICINDIA 2,575 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

பாயிரவியல்- அதிகாரம் 2. வான்சிறப்பு
அதிகார முன்னுரை:
அஃதாவது, அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும், நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
திருக்குறள்: 11
வானின் றுலகம் வழங்கி வருதலாற் வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
றானமிழ்த மென்றுணரற் பாற்று. தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று.

வான் நின்று உலகம் வழங்கி வருதலால் = மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;
தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று = அம்மழைதான் உலகத்திற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது.
உரை விளக்கம்:
நிற்ப என்பது, நின்று எனத்திரிந்து நின்றது.
உலகம் என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது, பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல்.
அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.

திருக்குறள்: 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉமழை.
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை.
பரிமேலழகர் உரை:
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை = அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல்.
சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின் அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.
திருக்குறள்: 13
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி.
பரிமேலழகர் உரை:
விண் இன்று பொய்ப்பின் = மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின்;
விரிநீர் வியன் உலகத்துள் = கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்;
நின்று உடற்றும் பசி = நிலைபெற்று உயிர்களை வருத்தும் பசி.
'பரிமேலழகர் உரைவிளக்கம்:
கடலுடைத்தாயினும் அதனாற் பயனி்ல்லை என்பார் 'விரிநீர் வியனுலகத்'தென்றார்; உணவின்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.
திருக்குறள்: 14
"ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளங்குன்றிக் கால்." (04) வாரி வளம் குன்றிக்கால்.
பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழாஅர் = உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் = மழை என்னும் வருவாய் தன்பயன் குன்றின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது.
உணவின்மைக்குக் காரணம் கூறியவாறு.
திருக்குறள்: 15
"கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பரிமேலழகர் உரை:
கெடுப்பதூஉம் = பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;
கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் = அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்;
எல்லாம் மழை = இவை எல்லாம் வல்லது மழை.
பரிமேலழகர் உரை விளக்கம்:
`மற்று` வினைமாற்றின்கண் வந்தது.
`ஆங்கு` என்பது மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல்.
கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், `கெட்டார்க்கு` என்றார்.
`எல்லாம்` என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி.
வல்லது என்பது அவாய்நிலையான் வந்தது.
மழையினது ஆற்றல் கூறியவாறு.
திருக்குறள்: 16
"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது."
விசும்பின்துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்)விசும்பின் துளி வீழின் அல்லால் = மேகத்தின் துளி வீழின் காண்பதல்லது;
மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது = வீழாதாயின், அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'விசும்பு' ஆகுபெயர்.
'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.
இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்.

Comment