இரு சகோதரர்கள் கு. அழகிரிசாமி சிறுகதை #irusagotharargal #kuazhagirisami #shortstory #kuazhagirisamy
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் கு. அழகிரிசாமிக்கென்று ஓர் தனித்த இடமுண்டு. அவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் அவரது படைப்புகள் பல மறுபதிப்பு செய்யப்பட்டு வருகின்றன. அவரது மொத்தத் தொகுப்புகளும் சமீபத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. இரு சகோதரர் என்ற கதை எழுதப்பட்டு 64 ஆண்டுகள் கடந்தாலும் அந்தக் கதையின் வாழ்வியல் விவாதத்திற்குரியது. எது தியாகம்? எது உலகப்பிரச்சினை? மனிதங்களின் மனம் எதை முன்வைக்கிறது? வாழ்க்கைச் சிக்கல்கள்? பெண் மனம் எனப் பல விசயங்களைக் கதை விவாதிக்கிறது. தொடர்ந்து கு. அழகிரிசாமியையும் வாசிப்போம். விவாதிப்போம்...