#Kannadhasan #Ponmazhai #Kanakadhara_Stotram
கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை
கவியரசர் முன்னுரை:
ஸ்ரீ ஆதிசங்கரர் பால வயதில் யாசகம் வாங்க ஒரு ஏழைப் பிராமணர் வீட்டுக்குப்போனபோது, வறுமையில் வாடிய அந்தக் குடும்பம் கடைசியாய் மிச்சம் இருந்த ஊறுகாய் [ நெல்லிக்காய்] ஒன்றை அவரிடம் கொடுத்தது.
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமையில் வாடினாலும் , மற்றவர்களுக்கு இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்றபடி, இருந்த நெல்லிக்காயையும் எடுத்துக்கொடுத்த அந்த குடும்பத்துக்காக , திருமகளை நோக்கிப் பாடினார், ஆதிசங்கரர்.
வானத்திலிருந்து உடனே தங்க நெல்லிக்கனிகள், அந்த வீட்டில் உதிர்ந்தன என்பது வரலாறு.
இன்றும் 'காலடி'யில் அந்த பிராமணக் குடும்பத்தின் வாரிசுகளும், அதே வீடும் இன்றும் இருக்கின்றன.
இன்று அந்த வீட்டின் பெயர் ' சொர்ணத்து இல்லம்'. இன்றும் அவர்கள் செல்வச் செழிப்போடு விளங்குகிறார்கள் .
ஆகவே இதை தமிழாக்குவதில் எனக்கு ஆசை அதிகம்.
கவிதையை விருத்தத்தில் எழுதியிருக்கிறேன். அறுசீர் விருத்தத்தை இருமடங்காக்கி இருக்கிறேன் .
இந்த ஸ்தோத்திரங்களை தொடர்ந்து பாடினால் எந்த வீடும் செல்வச்செழிப்போடு விளங்கும்.
அன்பன்
கண்ணதாசன்
09.12.1977.
What's app - https://whatsapp.com/channel/0029Va5UtCABVJl9oGeDJY1M
🌐 http://www.kannadasanpathippagam.com/