MENU

Fun & Interesting

Keezhadi excavation findings - full details | கீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா? | Keeladi

BBC News Tamil 875,112 5 years ago
Video Not Working? Fix It Now

கீழடியின் முக்கியத்துவம் என்ன? அதில் கிடைத்த முடிவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிபிசி தமிழின் முரளிதரன் காசிவிஸ்வநாதன் விளக்குகிறார்.  மதுரை மாவட்டத்தின் அருகே இருக்கும் கீழடி எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.  தென்னந்தோப்பு நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் இருந்த ஒரு தொல்லியல் மேடு இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான சூழலை உண்டாக்கக்கூடுமா என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.  கீழடியில் கிடைத்த பொருட்கள் ஏன்? அங்கு கிடைத்த விளையாட்டு பொருள்கள் எவை? ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில்தான் மக்கள் வேலை பார்த்து தம் உணவுத் தேவை, வசிப்பிடத் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்தபின்னர் ஓய்வு நேரத்தில் விளையாடுவதற்கான நேரத்தை பெற்றிருப்பர். அப்படியானால் கீழடியில் கிடைத்த விளையாட்டு பொருள்கள் சொல்லும் கதை எது? தமிழ் பிராமியின் வயது என்ன?    மிகவும் அழகிய வேலைப்பாடு மிக்க ஆபரணங்கள் கிடைத்திருக்கின்றன. இது சொல்லும் சேதி என்ன? கட்டட தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ஏன் முக்கியமானது? இப்படிப் பலப்பல கேள்விகள் - இதற்கான விடைகள் என்ன? Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

Comment