குலதெய்வ வழிபாடு அவசியமா? [KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA?] பிரபல பேச்சாளரும் கல்விப் பணியாற்றுபவருமான கலைமாமணி முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் அளித்த தீர்க்கமான பதில்கள் இதில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் மென்மையாக வாழ கற்றுக்கொடுப்பது எப்படி? ‘அழுதால் உனைப் பெறலாமே’ என்று இறைவனைக் குறித்துச் சொல்கின்றனர். ஆனந்தமாக இருந்தால் இறைவனைப் பார்க்கமுடியாதா? மூத்தோர்களுக்குக் கடன் செய்வதால் ஏதாவது பலன் உண்டா? குலங்கள் எப்படி உருவாகின? குல தெய்வ வழிபாடு அவசியமா?