MENU

Fun & Interesting

இந்த கோயிலில் விழுந்த பழம் மீண்டும் மரத்தில் ஒட்டுமாம் | Lord Shiva | Shiva Temple

Dinamalar 55,297 1 month ago
Video Not Working? Fix It Now

#Partnership இந்த கோயிலில் விழுந்த பழம் மீண்டும் மரத்தில் ஒட்டுமாம் | Lord Shiva | Shiva Temple | Divine Journey | Ancient Temples காஞ்சிபுரம் மாவட்டம் எழுச்சூர் கிராமத்தில் நல்லிணக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் அழகான இந்த ஊரில் கோயிலை காணலாம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ராஜ கோபுரத்துடன் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. விஜய நகர பேரரசின் மன்னன் வீரநரசிம்மா, கிபி 1429ல் எழுச்சூர் உள்ளிட்ட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தை சேர்ந்த 54வது சங்கராச்சார்யாருக்கு தானமாக வழங்கினார். பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தாயார் பெயர் தெய்வநாயகி. கோஷ்டத்தில் கண்பதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரங்கள் உள்ளன. இந்த பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு கோயில் பின்பகுதியில் உள்ளனர். மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்பாளிடம் ஒரு மஞ்சள் சரடை கட்டிவிட்டால், 90 நாட்களுக்குள் திருமண பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஏறழிஞ்சில் மரத்தின் முன் நெய் தீபம் ஏற்றி, அம்பாளுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்கின்றனர். குரல் வளம் வேண்டுவோர் அதாவது பாடகர்கள்,பேச்சாளர்கள், அரசியலில் பிரகாசிக்க விரும்புபவர்கள் நல்லிணக்கீஸ்வரருக்கும், நந்திக்கும் பால் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும். சுவாமிக்கும், அம்மனுக்கும் பால், தேன் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.#LordShiva #ShivaTemple #DivineJourney #AncientTemples

Comment