ஸ்ரீ பழனி ஆண்டவர் துணை
குப்பா கிச்சன் செட்டி குமரப்பன் பரம்பரையினர்.
ஸ்ரீ பழனி கோவில் வீடு
நெற்குப்பை
ஸ்ரீ குரோதி ஆண்டு தை திங்கள் 24 ஆம் நாள் 06.02. 2025 வியாழக்கிழமை மாலை.
நெற்குப்பை ஸ்ரீ பழனி கோயில் வீட்டில் பழனி கட்டளை காவடி 40 காவடிகள் பாதயாத்திரையாக பழனி முருகனுக்கு ஸ்ரீ பழனி ஆண்டவருக்கு காவடி செலுத்த பாதயாத்திரையாக நடைப்பயணம்.
அடியேனின் சொந்த ஊரான நெற்குப்பை .
ஸ்ரீ பழனி கோவில் வீட்டில் 40 காவடிகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன.
கோயில் வீட்டில் மூலஸ்தானத்தில் கட்டளை காவடி அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது ஆனந்தமாக தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தேன்.
40 காவடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன ஊர்மக்கள் காவடிகள் மேல் துண்டு போர்வைகள் பிஸ்கட்கள் மிட்டாய்கள் மாலைகள் என்று காவடி தூக்குவோருக்கு பயன்படும் வகையில் தானம் செய்தனர்