அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
செங்கோட்டை மேலூர் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறும் அல் அய்னுல் ஜாரியா பெண்கள் மதரஸாவின் 9-ம் ஆண்டு நிறைவு விழா, 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, மக்தப் மதரஸா மாணவர்களின் ஆண்டு விழா மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13, 14, 15, 16 ஆகிய 4 நாட்கள் நடைபெற்றது.
ஜமாத் தலைவர் முகமது இப்ராஹிம் அவர்கள் தலைமையில் செங்கோட்டை அனைத்து ஜமாத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டார ஆலிம்கள் வாழ்த்துரை நிகழ்த்த
மௌலானா, அல்ஹாபில், முனைவர்
M.கலீல் அகமது முனீரி M.A., M.Phil., Ph.D., அவர்கள்
ஸனது வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.