MENU

Fun & Interesting

Maadu Valarpu || 20 லிட்டர் பால் தரும் மாடுகள் மாத வருமானம் எவ்வளவு? ( Successful Cow Dairy )

Vibe With Vignesh 808,992 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

#milkfarm #dairyfarm #intercropping
Maadu valarpu || 20 லிட்டர் பால் தரும் மாடுகள் மாத வருமானம் எவ்வளவு?
1 மாடு ஆரம்பித்த பண்ணை தற்போது 10 மாடுகள் உடன் / 3 வருட மாடு வளர்ப்பு அனுபவம்
மாடு வைத்திருக்கும் அனைவருக்குமே காலை முதல் இரவு வரை பல்வேறு வகையான பண்ணை பணிகள் உள்ளது. சரியான திட்டமிடுதலும் , பணிகளை எளிமைபடுத்தும் கருவிகளையும் பயன்படுத்தும் போது மாட்டுப்பண்ணையை சிறப்பாக நடத்த முடியும்(Successful dairy farm).

Here we have a complete discussion of a dairy farm.

For more details :
Saravanan
contact num: +919597090890

Vignesh Kumar
contact num: +919786540227

How to make Successful Cow Dairy Farm in Tamil | HF Cow - Jersey Cow - Red Sindhi | Part - 1
https://youtu.be/-JPgNdRZvTM

Maadu Valarpu 17 வருடங்கள் அனுபவம்:
https://youtu.be/g_idHfH486M

துரிஞ்சல் நாட்டு மாடுகள் வளர்ப்பு:
https://youtu.be/5yerdt2kVyQ

Maadu Valarpu | பாம்பின் தோல் சாப்பிட்ட மாடு?
https://youtu.be/jkZ1fkmJmjw

Subscribe us:
https://www.youtube.com/channel/UCFPw0ueUD1RYUqN8GGf7Yeg?sub_confirmation=1

Social Media:
Instagram: https://www.instagram.com/we_intercropping/
Instagram: https://www.instagram.com/vignesh_kumar_j/

Check my fav Playlists:
Vlogs: https://www.youtube.com/watch?v=uU7qQLxBDNw&list=PL8LpdWWRsL97aNHcVMUgE1eAZGRN0Hr54

Farming Stories: https://www.youtube.com/watch?v=sEMPzyAlHMM&list=PL8LpdWWRsL974CSkQ3nsBXKypDLru2Ogf

Green Chilli Farming Process: https://www.youtube.com/watch?v=PnRGVqcEObQ&list=PL8LpdWWRsL941xhOAKbqfJZrkOx0ZeTds

This Channel shows the importance of planting seeds, Home gardening and growing edible plants. it will describe the lifestyle and work of people.

கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள்
விவரங்கள்
சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.

முக்கிய பராமரிப்பு உத்திகள்
சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு
சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.
நோய்கள்
சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்

Comment