மண்டலம் என்றால் என்ன.? ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்இவ்வுல
கில நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படியான விஷயம் அன்றாடம் நாம் அதிகமாக கேட்கும் விஷயங்களை தான். அந்த வகையில், நம் அதிகமாக மண்டலம் என்பதனை கேட்டு இருப்போம். ஆனால், அதனை பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க மாட்டோம். ஆகவே, அதனை அறிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
ஒரு மண்டலம் என்பதை நாம் அதிகமாக ஆன்மீகத்தில் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அடுத்தாக சித்த மருத்துவத்தில் கேட்டு இருப்போம். ஆனால், இதனை தவிர்த்து பல்வேறு இடங்களில் ஒரு மண்டலம் என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், ஒரு மண்டலம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மண்டலம் என்றால் என்ன.?
ஒரு மண்டலம் என்பது இந்துக்களால் பக்தியிலும், ஆன்மீகத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு கால அளவாகும். ஒரு மண்டலம் என்பதை 5000 ஆண்டுகளுக்கு முன்னராகவே கணக்கிட்டு தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று வரலாற்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்.?
ஒரு மண்டலம் என்பது தொடர்ந்து 48 நாட்கள் ஆகும். எந்தவொரு செயலையும் தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வருவதன் மூலம், அதில் நற்பலன்களை பெற முடியும் என்பது நம்பிக்கை. அதாவது, நாம் வாழ்க்கையில் நன்றாக வாழ நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் ஆசி மிகவும் அவசியம்.
சூரியன் முதல் கேது வரையுள்ள கிரகங்கள் (நவகிரங்கங்கள்) – 9
மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகள் – 12
அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள நட்சத்திரங்கள் – 27
அதாவது, நவகிரங்கள் + ராசிகள் + நட்சத்திரங்கள் = (9+12+27) = 48 (ஒரு மண்டலம்). ஆக, நாம் செய்யும் எந்தவொரு செயலையும் தொடர்ந்து 48 நாட்கள் செய்வது வருவதன் மூலம் நினைத்த விஷயம் நிறைவேறும்.
சித்த மருத்துவ முறையில் இயற்கை மருந்தை ஒரு மண்டலம் சாப்பிட்டு வர சொல்வது வழக்கம். ஒரு மருந்து நம் உடலில் சேர்ந்து முழுமையாக குணமாக 48 நாட்கள் எடுக்கிறது. அதேபோல், ஆன்மீகத்தில் நாம் செய்யும் காரியங்கள் முழுமையடைய ஒரு மண்டலம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தொடர்ந்து 48 நாட்களுக்கு ஒரு மண்டலம் என மண்டல அபிஷேகம் விரதம் செய்யப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முறைகளில் மண்டலம் பின்பற்றப்பட்டு வருகிறது.