MENU

Fun & Interesting

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் | செய்வினைகளை நீக்கும் தலம் | Melmalayanur Angalamman Temple

Video Not Working? Fix It Now

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் இந்த அம்மனின் புற்று மண்ணை 48நாள் நெற்றியில் இட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும். அன்னை அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள். தலவரலாறு : ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. சித்தம் கலங்கி, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிப்பதற்காக மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர். இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும். ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிஉலா வருவார். இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி மேலும் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா?. தட்சனின் மகள் தாட்சாயினி. பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி. அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தான் தட்சன். முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார். தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில் ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள். தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று, தலைகால் புரியாத சந்தோஷம் கொண்டான். சிவபெருமானின் மாமனாராகத்தான் ஆகப் போவது அவனுள் ஏராளமான கர்வத்தை ஏற்படுத்தியது. ஒரு தடவை சிவனின் மாமனார் என்ற அகந்தையுடன் சிவனைப் பார்க்க கயிலைக்குச் சென்றார். ஆனால் அவனின் இறுமாப்பு நந்தி தேவனுக்கு நன்றாகவே புரிந்து போனது. சிவபெருமானைப் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார் நந்திதேவன். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தட்சனுக்கு கோபம் ஏற்பட்டது. `என்னை அனுமதிக்க மறுத்து அவமதிப்பதா? நான் யாரென்று காண்பிக்கிறேன்' என்று கோபத்தில் கர்ஜனை முழக்கமிட்டவாறு அங்கிருந்து வெளியேறினான். தனது அரண்மனையில் மிகப் பெரிய யாகத்தை நடத்தினார். அதற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான். ஆனால், வேண்டுமென்றே, தன்னை அவமதித்த சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை மட்டும் தட்சன் அழைக்கவில்லை. ஆனால், தனது கணவரைத் தனது தந்தை அவமானப்படுத்துவதை தாட்சாயினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தந்தையின் கர்வத்தைப் போக்கத் துடித்தாள். உடனே தனது உருவத்தை அகோரமாக மாற்றினாள் தாட்சாயினி. நேராக அங்கு கோபத்துடன் சென்று யாகத்தை அழித்து நாசமாக்கினாள். அத்துடன் தன் தந்தை தட்சனையும் அழித்து, தன் கோபத்தைப் போக்கிக் கொண்டாள். அப்படியே அந்த யாக நெருப்பில் குதித்து தனது உருவத்தைப் போக்கினாள். அந்த இடம் தான் மலையனூர்! தாட்சாயினி யாகத்தில் விழுந்து சாம்பலான காரணத்தால் இன்றளவும் மேல் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக சாம்பலே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உருவமற்ற காளியானாள் பராசக்தி. அதாவது தனது அங்கத்தை அழித்த காளியானாள் தாட்சாயினி. அங்+காளி என்பது அங்காளி அம்மன் என்றாகி, காலப்போக்கில் அங்காளம்மன் என்று பெயர் பெற்று விளங்குவதாகவும் ஒரு கூற்று உண்டு. இதனை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டார். அங்கு விரைந்து வந்து அங்காளியைத் தன் தோளில் சுமந்தவாறு ஆங்கார நடனம் ஆடினார். கோபம் உக்கிரமாக இருந்த காரணத்தால் அவரின் நடனத்தின் வேகம் பார்ப்பவரைக் கதிகலங்கச் செய்யும் வகையில் படுபயங்கரமாக இருந்து. சுழன்ற வேகம் தாங்காமல் அங்காளியின் கை ஒன்று துண்டாகிக் கீழே விழுந்து விட்டது அப்படி விழுந்த இடம்தான் தண்டகாருண்யம் என்ற சக்திபீடம் என்பர். அமைவிடம் : மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கோயில் Google map link Sri Malayanur Angala Parameswari Temple https://maps.app.goo.gl/kLU5fQBCbjjbkQAZA if you want to support us via UPI id k.navaneethan83@ybl Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join If you want to Support our channel via UPI ID nava2904@kvb Join our channel Whats app Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04 - தமிழ்

Comment