கந்தர் அலங்கார பாடல் ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக் காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.