MENU

Fun & Interesting

சிறப்பு கேள்வி-பதில் | Must Watch | Brahma Suthrakulu | Tamil

Brahma Suthrakulu 88,456 4 years ago
Video Not Working? Fix It Now

#Brahma_Suthrakulu raja_yoga_patasalai Polivakkam, Tirruvallur. Tamil Nadu 9361102084 https://maps.app.goo.gl/wP31Mg6brgjgiCoQ6 ராஜயோகப் பாடசாலை பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள். முருகன் ஆலயம். ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது. குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும். இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார். எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது. கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம். இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார். உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு – தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர். #நாம்_எதைப்_பார்த்து_அஞ்ச_வேண்டும் #உலகம் எப்படி அழியும் ? எப்பொழுது அழியும் தெரியுமா ??? What is the use of directions #திசைகள்ஆல் பயன் என்ன #Will meditation remove the suffering #தியானம் செய்தாள் துன்பம் நீங்குமா #நீங்கள் சாதிக்க நினைப்பவரா? இதை கேளுங்கள் ~ இனி அனைத்திலும் வெற்றியே #பயபக்தி எதற்குத் தேவை ??? #எது உண்மையான அன்பு !!! #நினைத்ததெல்லாம் நிச்சயம் நடக்கும் ! புதிதாய் வெற்றி பிறக்கும் #இந்த உலகத்தில் உங்களுடையது எது #நன்மையே நடக்கும் ~ உன்னை தவறாய் பேசினால் , இதை செய்தால் போதும் ~ வெற்றி உனக்கே - Listen Fully!! #விதியை ஜோதிடத்தால் வெல்ல முடியுமா ??? #சாபங்கள் உண்மையாகவே பலிக்குமா !!! #ஏன் மரணபயம் தோன்றும் ??? #தீய பழக்கம் விலக என்ன செய்யவேண்டும் ??? #உண்மை எப்படி விளங்கும் ??? #மற்றவர்களின் மனதில் உள்ள ரகசியங்களை அறிய வழி உண்டா ??? #ஆசையையும் , சுயநலத்தையும் தவிர்ப்பது #இறுதிச் சடங்கிற்கு சென்றாள் ஏன் தலை குளிக்க வேண்டும் ??? #ஆசையையும் , சுயநலத்தையும் தவிர்ப்பது #உன் வழிக்காட்டி யார் என்று தெரிந்துக் கொள் !!! #குழந்தையின்மைக்கு காரணம் என்ன ??? #நான் பாறையில் விதை விதைக்கிறேன் !!! #வாழ்க்கையில் மறக்கக் கூடாதது எது ??? #108 திவ்ய தேசம் சென்றால் என்ன பயன் ??? #யார் ஆபத்தில் இருக்கிறார்கள் ??? #யார்மீது அன்பையும், கோபத்தையும் செலுத்த வேண்டும் ??? #இன்றைய சட்டம் யார் கையில் உள்ளது !!! #ஏன் ஒருவருக்கு திருமணம் மிக அவசியம் !!! #தூங்கும்பொழுது என்ன நடக்கும் தெரியுமா ??? #ஆன்மீகம் மதத்தையோ அல்லது குறிப்பிட்ட கடவுளையோ சார்ந்ததா ??? #மன தைரியத்திற்கு என்ன வழி ??? #சிவத்தை அறிவோம் ~ சாதனை புரிவோம் (LISTEN FULLY - நம்மால் நிச்சயம் முடியும் ) #சொன்னால் பெய்யும் மழை !!! #இந்தியாவின் நான்கு தலைச்சிறந்த மனிதர்கள் யார் தெரியுமா ??? #துன்பத்திலிருந்து மீள என்ன வழி ??? #மனம்_தளராதே ~ இனி அனைத்தும் நன்மைக்கே !! A Life-Changing Speech

Comment