MENU

Fun & Interesting

NEET 2022 Results | B.Brindha | Topper from Government Schools | Tamil Nadu Topper 4th | MBBS in MMC

Geethasamy Publishers 237,527 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

2022ம் ஆண்டு நடைபெற்ற NEET தேர்வில் அரசு பள்ளியில் படித்த மாணவி பிருந்தா தனது முதல் முயற்சியிலேயே 467 மதிப்பெண்கள் வாங்கி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களில் நான்காமிடமும் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடமும் பிடித்து சாதனை செய்து சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர உள்ளார்.

விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவி பிருந்தா நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில், நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் Cut off 200 க்கு 200 வாங்கி சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பனிரெண்டாம் வகுப்பில் 600க்கு 593 மதிப்பெண்கள் வாங்கி அரசு பள்ளி மாணவர்களின் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.

இவரது தந்தை பெயர் பாலன் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய தாய் விஜயலட்சுமி , சகோதரிகள் இரண்டு பேர் உள்ளிட்ட குடும்பத்தில் நான்கு பேர் வாழ்வாதாரத்திற்கும் சாதாரண வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வருகிறார். குறைந்த வருமானத்தில் இவர்களை படிக்க வைத்த நிலையில், மாணவி பிருந்தா எட்டாம் வகுப்பிலேயே மத்திய அரசு நடத்திய திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்று மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நான்கு ஆண்டுகள் பெற்றுள்ளார்.

NEET தேர்வில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் மாணவர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற தனது அனுபவத்தையும் நமக்கு இங்கு சொல்ல இருக்கிறார் வாருங்கள் கேட்போம்.

#neet2022 #brindha #neettopper #governmentschool #nta #nationaltestingagency

BIn the NEET 2022 results, Ms.B. Brindha from Viluppuram district of Tamil Nadu got 4th Rank among the government school students in the district. She scored 467 marks on her very first attempt. In counseling, she chose the prestigious Madras Medical College for her MBBS Course. Great achievement, we also wish her, "All the Best"

It is also worth noting that Brinda, who studied from sixth to 12th standard in Villupuram Government Girls Model Higher Secondary School, scored 100% marks in four subjects in the 12th standard examination and got a cut-off of 200 out of 200 in Tamilnadu engineering colleges.

It is also worth noting that she has secured 593 marks out of 600 in the twelfth standard and has topped the government school students in Tamil Nadu.

His father's name is Balan, and he died in an accident a few years ago. In this situation, four members of the family, including her mother Vijayalakshmi, and two sisters, are taking care of the family by doing normal work for their livelihood. Brindha is also a merit scholarship holder.

She shares her experience which other Government School students can emulate.

E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

Comment