https://youtu.be/j_wBNgHREfQ
நிரோஷா கார்த்திக்கின், "மாய விழியால் மனம் பறித்தாய்" RJ கிருத்திகா ராஜ் குரலில்...
Teaser:
அவள் இறங்கும் முன்னே அருகில் இழுத்து, அவனைக் கட்டி இழுக்கும் கண்களில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் “ஈவினிங் நான் பிக்கப் பண்ண வரேன்...” என்று சொல்ல, மறுக்க தோன்றாமல் தலையசைக்க,
“உன்னோட ரியாக்ஷன் எப்ப மாத்த போற அபி? முதல் முறை கிஸ் பண்ணும்போது அதிர்ச்சியா, ஆச்சரியமா பார்த்த. அடிக்கடி பண்ணும் பொழுது கண்ணுல, வேற ரியாக்ஷன் காட்டலாமே...” எனவும் மீண்டும் அதே பாவனை காட்ட,
“கொஞ்சமா லவ் பீலிங்ஸ் காட்டலாம்ல...” என்று கேட்க, அதற்கு மேல் அவன் அருகே அமர்ந்திருக்கவில்லை.
பதட்டத்துடன் காரை விட்டு இறங்கியவள், அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட பார்லருக்குள் நுழைந்து விட, புதிதாய் காதல் வந்த டீன் ஏஜ் பயன் போன்ற துள்ளலுடன் ‘ஈவினிங் கிஸ் பண்ணும் போது என்ன ரியாக்ஷன் கொடுக்கிறான்னு பார்க்கணும்...’ என்று சிந்தித்துக்கொண்டு விசில் அடித்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
அபி தான், கணவனின் முத்தத்தையும் அவன் தன்னிடம் எதிர்பார்க்கும் உணர்வுகளையும் அதற்கு எப்படி மறுமுறை தான் அவனுக்கு சொல்லால் அல்லாமல், கண்களால் பதில் கொடுக்கப் போகிறோம் என்று தெரியாமல் தவித்துப் போனாள்.
ஆசிரியர் காலையில் கேட்ட கேள்விக்கு, மாலையில் கட்டாயமாக பதில் சொல்லிவிட்டுத்தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற மாணவியின் மனநிலையில் தடுமாறிக் கொண்டிருந்தவள், அன்றைய நாள் முழுக்க இயல்பிலேயே இல்லாது போக, அவளிடம் பணிபுரிந்தவர்கள் ரகசியமாக “மேடமோட முகத்தில் கல்யாணம் பண்ண கலை அப்படியே தெரியுது. தனியா யோசிச்சுகிட்டு வெட்கப்படறதை பார்க்கும் பொழுது ரொம்ப அழகா இருக்காங்க...” என்று சொல்லி சிரித்தது பாவம் அவளுக்கு தெரியாது போனது..!
அவள் தான் இந்த உலகத்திலேயே இல்லையே..
To read in kindle: https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-Tamil-ebook/dp/B0DJ9MJPGB
#tamilaudionovels
#tamilnovels
#audiobooksintamil
#tamilaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobook
#rcnovelsaudio
#tamilstories
#romantictamilnovels
#mohanamaninovels
#love&romancenovels
#divyashobananovels
#newtamilstory
#family/love/romanticnovels
#audible
#tamilvoiceover
#lovenovels