முற்றத்து வாழ்வு இனிமையை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. அன்பு, கோபம், பிடிவாதம் நேசம், கரிசனை, பரிவு, மன்னிப்பு என எல்லாம் இணைந்த கூட்டுக் குடும்பங்களாக தாயகத்தில் வாழ்ந்த நாங்கள் புலம்பெயர் நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும் எல்லோரும் ஏதோ ஒரு நேரம் சொல்லிக் கொள்ளும் விடயம் ''எங்கடை முற்றத்திலை இருந்து குடிச்ச ஒரு செம்பு தண்ணி போலை வருமோ`` என்ற வார்த்தையைத்தான். எல்லாமுமாய் இருந்த எங்கள் முற்றம் இப்போது எப்படி இருக்கின்றது என்று காட்சிகளாயும் வார்த்தைகளாயும் சுமந்து ஒளிபரப்பாகின்றது ஊர்முற்றம் நிகழ்ச்சியாக...
Subscribe us : http://bit.ly/217eqho
Website : http://www.tvibctamil.com/
YouTube : https://www.youtube.com/c/IBCTamilTV
Facebook : https://www.facebook.com/IBCTamilTelevision/
Twitter : https://twitter.com/ibctamilnetwork
Google+ : https://plus.google.com/+IBCTamilTV