விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுத்து அதை காய்ச்சி தயாரிப்பது பருத்திப்பால். பருத்திப்பாலுக்கு பெயர் போன மதுரையில் எங்கெங்கு காணினும் பருத்திப் பால் கடைகள் தான். இதன் சுவையும், பயனும் அறிந்து தமிழகமெங்கும் பரவியது நல்ல விஷயம் தான்.
பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இதனை triple nutrients என்று கூட அழைக்கலாம். உடலுக்கு ஊட்டமும், வலுவும் தருவதால் பருத்திப் பாலை வாரம் ஒரு முறையாவது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது ஒரு சிறந்த மலமிளக்கி.
*பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு. பால் சுரக்க உதவும்.
*மாட்டுப்பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று.
வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.
வேகன் (vegans) டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.
இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.
நெஞ்சு சளியை விரட்டும்.ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம்.
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
இந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்த பருத்திப்பால் வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
#paruthipaal #cottonseeds #maduraispecial #paruthipaalreceipe #cottonmilk #healthdrink #easyhealthdrink #maduraifamous #jikarthanda #jigarthanda #maduraijigarthanda #bloodpressure #irregularperiod #mensus #ulcers #healthtips #teakadaidrink @TeaKadaiKitchen007