MENU

Fun & Interesting

சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED -RUKMANI AMMA SPEECH- KOVIL -4

SkyView PANTHAL பந்தல் 6,112 lượt xem 2 months ago
Video Not Working? Fix It Now

பக்தி பரவலுக்காக...

ஆலயங்களின் சிறப்பு - பகுதி 4
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு-

REMASTERED

SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part4

பகிர்வுப் பதிவு.....
சேலம். ருக்மணி அம்மாள் 03.02.1938 ல் நாமக்கலில் பிறந்தார்... அவதாரம் பூர்த்தியானது 02.02.2020..

அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட அந்த கால கட்டத்திலே அம்மையாரை ஆசிரியர் பணி பயில வைத்து அழகு பார்த்தவர் அம்மையாரின் தந்தை... 16 வயதில் ஆசிரியராகத் தேர்வு பெற்று 42 ஆண்டுகாலம் இடைநிலை ஆசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் (1954-1996) சிறப்பாகப் பணி ஆற்றினார்...
பிறந்த குழந்தை பருவம் வரை வளர்ந்தது எல்லாம் நாமகிரி தாயார் சன்னதியிலும், நரசிம்ம சுவாமி சன்னதியிலும் தான்... M.A (தமிழ், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல்) பட்டங்களும், 53வது வயதில் B.Ed பட்டமும், 57வது வயதில் 5வது M.A வும் பெற்றார்...

விடிந்தால் சரித்திர பரீட்சை ஆனால் மேடையில் பேசும் போது கும்பகர்ணன் குற்றவாளி என வழக்காடு மன்றம், பேசி முடித்த பின் கையிலே சரித்திர புத்தகம் அப்படி படித்து விட்டு வந்தவர் நம் அம்மையார்... ஆற்காட்டில் அம்மையார் கால் படாத ஒரு திரௌபதி கோவிலும் இல்லை, காவியத்தை கண் முன் நிறுத்தும் வல்லமை அம்மையாருக்கு உண்டு... லட்சக்கணக்கான மேடையைப் பார்த்தவர்...
அம்மையார் பாடம் நடத்தும் பொழுது சாப்பாடு கொண்டு வரும் அம்மாக்கள் கூட அம்மையார் பாடத்தை ரசிப்பார்கள்... கைடுகளை எல்லாம் கட்டி போட்டுவிடுவார், புத்தகத்தில் எப்படிப் பாடம் உள்ளதோ அப்படியே எழுது என்பார், நீ 200க்கு 200 மதிப்பெண் பெற்றால் கோனார் உரைக்கு பெருமை, ஆனால் நீ கல்லூரி சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொன்னால் எனக்கு பெருமை என்பார்...
தலையில் பத்து தையல் போட்டும், கால் உடைந்து இருந்த நிலையிலும் பேசியே தீருவேன் என பேசினார்...

அம்மையார் எழுதிய புத்தகங்கள் உறவும் நட்பும், கேள்வி இன்று பதில் அன்று, புள்ளி மாறாத கோலங்கள்... அம்மையாரின் சொல் ஆற்றலாலும், பேச்சு ஆற்றலாலும் கிடைத்த விருதுகளும், பட்டங்களும் வரலாற்றுச் சொற்பொழிவாளர், தமிழ் கடல், இலக்கிய அருவி, இடைநிலை ஆசிரியர், சொல்லின் செல்வி, சிலம்பு செல்வி, நாவுக்கரசி, அமுதமொழி, தமிழ் வித்வான், தத்துவப்பேரொளி, கலைவாணி, வாழும் ஔவையார், நல்லாசிரியை விருது தேசிய அளவிலும், மாநில அளவிலும், பொற்றாமரை, இலக்கியச் சக்கரவர்த்தினி, எல்லாக் கம்பன் கழகங்களிலும் கம்பன் விருது பெற்று, முன்னோடியாக நின்றவர்...

குடியாத்தம் படவேட்டம்மன் கோவிலிலே வாரியார் சுவாமியே நேரில் வந்து, உள்ளத்தை உருக்குகின்ற மணிமணியான பேச்சுகளை பேசுவதினால், உங்கள் அப்பா அம்மா உருக்மணி என பெயர் சூட்டி இருக்கிறார்கள் நீ வாழட்டும் என்று வாழ்த்தினார், அந்த மகானோட வாழ்த்து தான் என்னை இது வரைக்கும் வாழ வைக்கிறது என்று அம்மையாரே கூறி உள்ளார்...

இலங்கை 12முறை, சிங்கப்பூர் 3முறை, மஸ்கட், பாரிஸ், லண்டன் போன்ற 12க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றி உள்ளார்...

ஆசிரியராக இருப்பதை விட என்றைக்குமே நான் மாணவியாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்பார்... எதற்கும் அஞ்சாமல் தான் கூற வந்த கருத்தை நயம்பட எடுத்துரைப்பார்... அம்மையாரின் பள்ளி பருவத்தில் அவர் குரல் சரியில்லை என மேடையை விட்டு விலக்கபட்டார், ஆனால் அந்த குரல் தான் உலகம் முழுவதும் தமிழ் பேசி நாக்கு பழுத்து சென்றது... அம்மையாரை தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட வில்லிபாரதம் முழுவதையும், இராமாயணத்தில் 6000 பாடல் மனப்பாடமாக சொல்லுவார்கள்... இத்தனை ஆண்டுகாலம் ஆண்டவனை பற்றி பேசியதால் திருவண்ணாமலை கோவில் கருவறை வரை சென்று பார்க்க அம்மையாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது... 27 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் பேசிய ஒரே பெண் பேச்சாளர்...

காங்கேயநல்லூரில் வாரியார் வாரிசு என்று பட்டம் கொடுத்தார்கள்... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாகப் பட்டம் பெற்றவர்... , கையிலே எந்த சீட்டும் இல்லாமல் சரளமாக பேசுவார்...

ஒருமுறை கண்ணதாசன் தலமையிலே கவியரங்கம் நடைபெற்றபோது, அப்பா உன்னுடைய பேனாவிற்கு மை ஊற்றி எழுதினாயா, இல்லை மது ஊற்றி எழுதினாயா, போதை வந்தால் பாதை மாறும், உனக்கோ போதை வந்தால் கீதை மலர்கிறது, அர்த்தமுள்ள இந்து மதம் அழகாகிறது என நகையாடினார்...

திருச்செங்கோட்டில் 18 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள்... 54 ஆண்டுகால ஆன்மீகச் சொற்பொழிவாளர்... 600 முறை மகாபாரதம் சொன்ன ஒரே பெண் பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர், 40 நாட்கள் வரை கூட சொல்லி இருக்கிறார்... 475 தொடர் சொற்பொழிவு இராமயணத்திலே செய்து இருக்கிறார்...

அம்மையாரின் பேச்சு திறமைக்கு கிடைத்த பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் முப்பதுக்கும் மேற்பட்டவை... எல்லா கம்பன் கவியரங்கத்திலும் மூத்த பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர்... சாதம் இல்லை என்றாலும் கூடப் பரவாயில்லை, நூல் இருந்தால் போதும் என வாழ்ந்து காட்டியவர்... ஒருநாளைக்கு கிட்டதட்ட 18 மணி நேரம் படிப்பவர்... அம்மையார் அறிவுப் பசியை மட்டுமே குறிக்கோளாக எண்ணி வாழ்ந்தவர்...

திருமணமே செய்து கொள்ளாமல் ஆன்மீகமே நமக்கு ஆனந்தம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்... நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார் மடியில் அம்மையார் வளர்ந்தவர்., 17வயதில் அம்மையார் தான் உரை ஆற்றினார், பேசி முடித்த பின்பு சிலம்பு செல்வர் மா.பொ. சிவஞானம் ஐயா சிலம்பு செல்வி ருக்மணி என்று பட்டம் சூட்டினார்...

50 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் கவியரங்கத்திலே குறவஞ்சி பாடி நாமக்கல் குறத்தி ருக்மணி என்று ரேடியோவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது...

அவதாரம் பூர்த்தியானது 02.02.2020..

மீண்டும் பிறக்கட்டும்

நன்றி

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes

Comment