MENU

Fun & Interesting

வீண் செலவு நீங்கி செல்வம் பெருக வழிபட வேண்டிய RT மலை ஸ்ரீவிராயசிலை நாதர் கோயில் | தென் காமாக்யா

Video Not Working? Fix It Now

ராட்சாண்டார் திருமலை ஸ்ரீ வீராசிலை நாதர் கோயில் மூலவர்: ஸ்ரீ வீராசிலைநாதர் அம்பாள்: பெரியநாயகி தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: கருட தீர்த்தம் ஊர்: ராட்சாண்டர் திருமலை மாவட்டம்: கரூர் தலவரலாறு இந்த கோயில் ஆறாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. ஒருமுறை சோழ மன்னன் மேற்கு நோக்கி வேட்டையாட சென்றான். அப்பொழுது இந்த ஆலயம் இருக்கக்கூடிய பகுதி நோக்கி வரான் ஆலயம் இருக்கக்கூடிய பகுதி அப்பொழுது இந்த மாதிரி மழையாக இல்லாமல் அடர்ந்த வனமாக காணப்பட்டது. மன்னன் வேட்டைக்கு வரும்பொழுது ஒரு பொன் உடும்பு மிகுந்த ஒளியோடு மண்ணன் முன் காணப்பட்டது. அந்த உடும்பை பார்த்ததும் மன்னன் அதை பிடிக்க வேண்டும் என்று சொல்லி ஆசைப்படுறான். ஆனால் அந்த உடும்பை பிடிக்க போகும்பொழுது அந்த உடும்பு மறைந்து விடுகிறது தினமும் இதே நிலைதான் ஒரு நாள் மன்னனோட கனவில் அந்த பொன் உடும்பு வருகிறது மன்னன் கனவில் உடுப்பை பிடிக்க முயற்சி செய்கிறான் ஆனால் உடும்பு கனவிலும் தப்பி ஓடி விடுகிறது அடுத்த நாள் மன்னன் தன்னோட படைகளை திரட்டி மேற்கு நோக்கி இந்த ஆலயம் இருக்கக்கூடிய பகுதிக்கு வந்து பாத்துட்டு இருக்கான் அந்த நேரம் அந்த உடும்பு வந்து மன்னனோட கண்ணுல மட்டும் படுது கொஞ்ச நேரம் கழிச்சு அனைவரோட கண்ணுலையும் அந்த உடும்பு வந்து படுது. உடனடியாக மன்னன் வந்து தன்னோட கையில் இருக்கக்கூடிய ஈட்டியை எடுத்து உடும்பு சொல்லக்கூடிய அந்த பாதை நோக்கி எரிய. உடும்பு ஒரு புற்றுகுள் போய் மறைஞ்சிடுது மன்னன் வீசிய ஈட்டி அந்த உடும்புவோட மேல் பட்டு அந்த புற்றுகுள் இருந்து ரத்தம் பீறிட்டு மன்னனோட கண்கள்ல வந்து படுது உடனடியாக மன்னனோட கண்கள் பறிபோயிருது. உடனடியாக மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறான் இறைவனும் அசரீரியாக நான் தான் உடும்பு உருவத்தில் வந்தது. ஆனால் அதை உணராமல் என் மேல ஈட்டி எறிந்தாய் இந்த இடத்தில் நான் வந்து சுயம்புவாக அருள் பாலிப்பேன் இங்கே எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு உனக்கு நல்லது நடக்கும் அப்படின்னு சொல்லி இறைவன் சொல்றாரு. இறைவன் கூறியதற்கு இனங்க மன்னன் வந்து அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பறாங்க அதன் பிறகு இழந்த தன் கண் பார்வையை மன்னன் மீண்டும் பெறுகிறான். சிறிது காலம் சென்ற பிறகு கேரளாவில் இருந்து வந்த ஒரு முனிவர் இந்த ஆலயத்தை வந்து தரிசனம் செய்வதற்காக வருகிறார் .அப்பொழுது இந்த தடத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானுடைய லிங்கப்பகுதி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்த மாதிரி சிதலமடைந்த சிவலிங்கத்தை வந்து பூஜை செய்வது ஆகாது. அதனால் வேறொரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வா உனக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும் அப்படின்னு சொல்றாரு. மன்னனும் தனக்கு வந்து காட்சி அளித்த சிவலிங்கம் சுயம்புலிங்கம் மீண்டும் சுயம்புலிங்கத்திற்கு நான் எங்க போவேன் எனக்கு வந்து மீண்டும் எப்படி சுயம்புலிங்கம் கிடைக்கும் அப்படின்னு சொல்லி இறைவனிடம் முறையிடுறாரு இறைவன் மன்னனிடம் நான் விரயமாய் இருக்கிறேன் அப்படிங்கறதால தானே மீண்டும் பிரதிஷ்டம் செய்ய விரும்புகிறாய். பரவாயில்ல நான் உனக்கு மீண்டும் சுயம்புவா காட்சி அளிக்கிறேன்னு சொல்லி அங்க இருந்த இரண்டு பாறைகளை பிளந்து அதன் மத்தியிலிருந்து இறைவன் சுயம்புவாக மன்னனுக்கு காட்சியளிக்கிறார். அந்த சிவலிங்கத்தையே இன்னைக்கு நம்ம தரிசனம் பண்ணக்கூடிய ஆலயத்தில் மூலஸ்தானமா மன்னன் பிரதிஷ்ட பண்றாரு ஆலயத்தோட பின்புறம் பார்த்தோம் அப்படினா அந்த பழைய சிவலிங்கத்தை வந்து மன்னன் வந்து பிரதிஷ்ட பண்ணி இருக்காரு விரையமாக நான் இருக்கிறேன் என்று நீ கருத்தியதால் நான் வந்து உனக்கு மீண்டும் சுயம்புவா காட்சி அளித்தேன். அதனால வாழ்வில் வந்து யாருக்காவது விரயம் அல்லது பணம் வீண் செலவு ஆகிறது அப்படின்னு சொல்லி வருத்தப்படக்கூடிய அன்பர்கள் இந்த தலத்தில் என்னை வழிபாடு செய்யும்பொழுது அவங்க வாழ்க்கையில் ஏற்படக்கூடிய விரயங்கள் எல்லாம் நீக்கி பணம் வீண் செலவு ஆவதை தடுத்து அவங்களுக்கு செல்வ வளம் அளிப்பேன் அப்படின்னு சொல்லி சிவபெருமான் இந்த தலத்துல மன்னனுக்கு வரம் வழங்கினதா வந்து சொல்லப்படுது மேலும் துர்வாச முனிவரால் சாபம் பெற்ற எம்பெருமான் நாராயணனின் துவாரபாலர்களான ஜெயன் விஜயன் இருவரும் அவர்கள் பெற்ற சாபம் நீங்கி வைகுண்டம் போவதற்கு முன்னாடி இறுதியாக வழிபாடு செய்த சிவத்தலமா இந்த ஆலயம் காணப்படுது. அதனால் அவர்கள் இருவரும் பெற்ற புண்ணியம் அனைத்தையும் இந்த ஆலயத்தோடு முகப்பில் அரசமர வடிவில் விட்டுட்டு போயிட்டாங்க அதனால இந்த தலத்துக்கு வந்து அரசமரம் வழியாக இங்க இருக்கக்கூடிய இறைவனை வந்து வழிபாடு செய்யும் அனைவருக்கும் சொர்க்கம் நிச்சயம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. பிராத்தனை வீண் செலவு நீங்கி செல்வம் பெருக வழிபட வேண்டிய தலம். மூலம் நட்சத்திரம் நாளில் கிரிவலம் வந்து அம்மனை வழிபட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோயில் Google Map Link https://maps.app.goo.gl/bQfXsQ3FJkL5hVaGA அமைவிடம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தோகைமலை செல்லும் பாதையில் சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தோகைமலை செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்து இன்னைக்கு நம்ம தரிசனம் பண்ணக்கூடிய ஆர் டி மலையில் அருள் பாதிக்கக்கூடிய இந்த சிவாலயத்தை எளிதாக அடையலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 6383617224 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04 Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join - தமிழ்

Comment