MENU

Fun & Interesting

போதையில் பணம்பறிக்கும் புளியந்தோப்பு RTO.! | PULIANTHOPE RTO ISSUE | MALAIMURASU SEITHIGAL

Malaimurasu Tv 24X7 61,892 lượt xem 1 day ago
Video Not Working? Fix It Now

போதையில் பணம்பறிக்கும் புளியந்தோப்பு RTO.! | PULIANTHOPE RTO ISSUE | MALAIMURASU SEITHIGAL

சென்னையின் மையப் பகுதியான பல்லவன் இல்லம் முன்பு அல்லக்கைகள் நான்கு பேர் உதவியுடன் வாகனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இவர்தான் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆர்.டி.ஓ. ஞானவேல்ராஜா.

தெறி பட விஜய் போல தன்னை நினைத்துக் கொள்ளும் ஞானவேல்ராஜா, செய்வதெல்லாம் திருட்டு வேலை, திருட்டு வேலை.. திருட்டு வேலை..

சாலையில் செல்லும் லாரிகளை மறித்து ஓட்டுநரிடம் லைசென்ஸ் இருக்கிறதா? ஆதார் கார்டு இருக்கிறதா? ஏடிஎம் கார்டு இருக்கிறதா? என கொக்கி போட்டு நூறு, ஐநூறு ரூபாயை வம்படியாக வாங்கி கொள்வதே இவரது பிரதான வேலை.

இந்நிலையில் மார்ச் 5-ம் தேதியன்று வழக்கம் போல அரிசி மூட்டை ஏற்றிச் சென்ற லாரியை இடைமறித்த ஞானவேல்ராஜா ஐநூறு ரூபாயை வெட்ட சொன்னார்.

இதற்கு ஓட்டுநர் மறுக்கவே, அப்படியென்றால் அரிசி மூட்டையை கொடுத்து விட்டு போ என மிரட்டியிருக்கிறார் இந்த அடாவடி அதிகாரி. ஒரு வழியாக அந்த லாரியில் இருந்து அரிசி மூட்டையை ஆட்டையை போட்டவர் இதே போல வேறு பருப்பு மூட்டையை ஏற்றி ஏதேனும் லாரி வருமா? என கொட்டக் கொட்ட முழித்து கொண்டிருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தனது கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்த ஆர்.டி.ஓ. ஃபுல் மப்பில் இருந்த போதை ஆசாமி.. ஸாரி.. தீவிர மதுப்பிரியர்...

ஒவ்வொரு வாகனத்தையும் மறித்து பணத்தை பிடுங்கும் செயலை நமது மாலைமுரசு செய்தியாளர் நேரில் பார்த்து அவரிடமே கேட்டார்.

செய்தியாளர் கேட்டதற்கு திடீரென பத்து வயது சிறுவன் போல முகத்தை வைத்தவர்,அரிசி மூட்டையா? எனக்கு ஒன்ணும் தெரியாதே.. என கேட்டதோடு, அல்லக்கைகளை நோக்கி, டேய் யார்ரா.. யார்ரா அரிசி வாங்குனது என நாடகம் போட்டார்.

உடனிருந்தவர்களும் இல்லை என தலையசைக்கவே, மீண்டும் செய்தியாளரை பார்த்து வேற.. வேற எதும் கேள்வி இருக்கா.. போ போ.. என போதையில் மிரட்டினார்.

அந்த இடத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களும் கேமராவை பார்த்து இந்த ஆர்டிஓ-வுக்கு இதே வேலையா போச்சு என கூறி ஞானவேல் ராஜாவை வறுத்தெடுத்தனர்.

பொதுமக்கள் சேர்ந்து கொண்டதால் செய்வதறியாது திகைத்த ஆர்டிஓ, அவரது உதவியுடன் ஆட்டையை போட்ட அரிசி மூட்டையை பதுக்கும் வேலையில் ஈடுபட்டார்.

போதையை போட்டுக் கொண்டு போகிற வருகிறவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் இதுபோன்ற மோசடி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


#malaimurasu #rto #PULIANTHOPE @malaimurasunewslive

Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.

Follow on:
Insta : https://www.instagram.com/malaimurasutv_official/
twitter : https://twitter.com/MalaimurasuTv
facebook : https://www.facebook.com/MalaiMurasu
website : http://www.malaimurasu.com

Live News : https://www.youtube.com/malaimurasunewsdigital

SUBSCRIBE to get the latest news updates: https://www.youtube.com/channel/UCXbufH95DIUqyAWSzeDI0JQ?sub_confirmation=1

Comment