இங்கு வெளியிடும் பதிவுகள் யாவும் சாய்நாதர் தினமும் எனக்கு தன் விஸ்வரூப தரிசனத்தை காண்பித்து கொடுத்து அருளிய அருளுரைகள் இவைகள்..சாய்நாதரின் உண்மையான ஆசீர்வாதங்கள்
இவைகளே..அவர் வேறு எந்த மார்க்கத்தையும் எனக்கும்,உங்களுக்கும் போதிக்க சொல்லவில்லை.
இவைகளை பொறுமையாக,நிதானமாக அமர்ந்து கேளுங்கள் நீங்கள் சாய்நாதரால் ஆசீர்வதிக்க படுவீர்கள்.இது உண்மை நான் தினமும் அவருடன் நேரிடையாக பேசுகிறேன்..உங்களாலும் முடியும்..
ஹேமாட் பந்த்தை எப்படி சாய்நாதர் தன் சொந்த வாழ்க்கை வரலாரை எழுத சொல்லி "அவரிடம் நீ வெறும் கருவி மட்டுமே உன்னை எழுத வைப்பவன்,பேசவைப்பவன் நானே " என்று ஆசீர்வாதம் அளித்தார் ..சாய்நாதர் தன் திருமேனியோடு உலவி கொண்டிருந்த காலத்தில் அவராகவே அனுமதி அளித்து எப்படி ஹேமாட் பந்த்தை ஆசீர்வதித்தாரோ...அதை போலவே இப்போழுதும் என்னை எழுத,பேச சொல்லி ஆசீர்வாதம் அளித்து என் இயற்பெயரை மாற்றி "சாயீஸ்வரீ " என்ற நாமத்தை எனக்கு கொடுத்தார்.
நான் நானாக இருப்பதை காட்டிலும் ..அவர்(சாய்)நானாக இருப்பது என் பூர்வ ஜென்ம புண்ணியமே..
சாய்அப்பாவின் வாழ்க்கை முறையையும் அவரின் ஆத்மசூட்சம லீலைகளையும்
அவரின் முழு அனுமதியுடன்,அவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரின் ஆத்ம புதல்வியான யான் (சாயீஸ்வரி)
சாய்நாதரின் அனுமதியுடன் மிக மிக பணிவுடன் அவர் என்னிடம் நாள்தோறும் கூறும் ஆசீர்வாதத்தையும்,அருள்மொழிகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னுடைய இந்த பிறப்பின் அம்சத்தை எனக்கு உணர்த்தி நான் செய்யவேண்டிய பணியை எனக்கு கொடுத்து என்னை இந்த வினாடி வரை ஆசீர்வதிக்கும் என் குருநாதராகிய என் ஆத்ம தந்தை சாய்அப்பாவை வணங்குகிறேன்.
ஸ்ரீசாயியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
#ஸ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்
for more details pls vist our facebook page(சாயீஸ்வரி)
அற்புதம் நிறைந்த பொற்பதங்கள்