#Partnership நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார்.
அவரிடம் 9.35 மணிக்கு விசாரணையை ஆரம்பித்தனர். 11:15 மணிக்கு விசாரணை முடிந்தது.
சீமானிடம் போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர்.
விஜயலட்சுமிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்தது உண்மையா?
கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தது உண்மையா? 7 முறை கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையில் கணவன் என்ற முறையில் கையெழுத்து போட்டீர்களா என்பது உட்பட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
எல்லா கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்தார். அவரது பதிலை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர்.# #Seeman #VijayalakshmiIssue #SeemanCase #BreakingNews #TamilNaduPolitics #SeemanVideo #PoliticalControversy #TNNews #InvestigationUpdate #LatestNews