https://youtu.be/5dbGFsGDmHE
நிரோஷா கார்த்திக்கின், "நெஞ்சம் மயங்குது மையலில்" RJ சுபீதா கண்ணன் குரலில்...
: “உன்கிட்ட பொய் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல பல்லவி. நான் பொண்ணு பார்க்க நினைச்சது ஸ்ரீமதியைதான்..! எனக்கு ஸ்ரீமதிய போட்டோவில் பார்த்ததும்,ரொம்பவே புடிச்சி இருந்துச்சு.
“போன்ல ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம். எங்களோட அலைவரிசை ஒன்னா இருந்துச்சு. அதனால தான் நிச்சயம் பண்ணலாம்னு சொன்னதும் ஓகே சொல்லிட்டேன்.
“அதுக்கு முன்னாடி யாருமே ஜாதகம் பார்க்கல.. எப்போ ஜாதகம் பார்த்தாங்கக தெரியுமா?” என்று கேட்டு விட்டு நிறுத்த,
அவ்ளோ, “எப்போ?’ என்று கேட்கவும்,
“ஸ்ரீமதியோட எனக்கு ஏற்பாடு ஆகியிருந்த நிச்சயத்தை நிறுத்தனும்னு நான் யோசிச்சப்போதான், நான் கையில் எடுத்த ஆயுதம் இந்த ஜாதகம் பார்க்கிறது..!” எனவும்,
“ஏன் கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சீங்க” என்றாள் படபடப்போடு..!!
“ஏன்னா.. நான் ஒரு நாள் ஹோட்டல் போயிருந்தேன்.அங்க நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பொண்ணு, அவளோட ஃப்ரெண்டோட வந்திருந்தா..
“பக்கத்துல போய் அறிமுகப்படுத்திக்கனும்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் அவளை ரசிச்சு பார்க்கணும்னு தோணுச்சு.புடவைல ரொம்ப அழகா இருந்தா..
“தலையில் பூ வைத்து..பட்டுப் புடவை கட்டி, நான் என்னோட மனைவி எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டேனோ அப்படியே இருந்தா..நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு..அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு கண்ணுக்கு குளிர்ச்சியா எதிர்ல இருந்தா..…
“நான் ரொம்பவே அவளை ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்.. அந்த ரசிப்போட அளவு எல்லை மீறியதா இருந்துச்சு பல்லவி. அதுக்கு மேல கட்டுப்படுத்திக்க முடியாம தான் அந்த பொண்ணு கிட்ட பேச வந்தேன்.
“அப்போதான் அவ.. நான் நீங்க எதிர்பார்த்த ஸ்ரீமதி இல்லை.. என்னோட பேரு பல்லவின்னு சொன்னா..ஒரு நிமிஷம் என்னால அந்த ஷாக்ல இருந்து வெளிவர முடியல” எனவும்,அவன் சொல்ல சொல்ல தன்னைப் பற்றி தான் சொல்கிறானோ என்ற யூகம் இறுதியில் உறுதியாக,ஏதும் சொல்லாமல் எதிர்பார்ப்புடனே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீ பல்லவின்னு சொல்லவும் என்னால ஏமாற்றத்தை தாங்கிக்க முடியல. அதைவிட ஒரு சாயல்ல இருக்க ரெண்டு பொண்ணுங்கள்ல நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு யாருன்னு தெரியாம, இன்னொரு பொண்ண ரசிச்சு பார்த்து இருக்கேன்.
“இதை நினைச்சு நான் அன்னைக்கு ஃபுல்லா அப்செட். எனக்கு ஸ்ரீமதிய பிடிச்சிருந்துச்சு தான். அதே நேரத்துல அவளோட சாயல்ல இருக்க உன்னை நான் அளவுக்கு அதிகமாக ரசிச்சேன். அது ரொம்ப தப்பு தானே..!
“என்னுடைய எண்ணம் உன்னை விட்டு விலகவே இல்லை. ஸ்ரீமதியை கல்யாணம் பண்ணாலும், உன்னை நான் பார்க்கும் பொழுது என் பார்வை உன்னை கண்ணியமா பார்க்கணும்னு என்னால உறுதியா சொல்ல முடியல.
“அதே நேரத்துல அக்காவை பொண்ணு பார்த்துட்டு, தங்கச்சி தான் பிடிச்சிருக்குன்னு சொல்ற அளவுக்கு மோசமானவனும் நான் கிடையாது.
To read in kindle : https://amzn.in/d/aGhps78
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்