#Partnership உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா என்கிற மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
உலகில் இதுவரை அறிமுகமான மின்சார கார்களில் டெஸ்லா அதிக தொழில்நுட்பம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
போகும் இடத்தை தேர்வு செய்துவிட்டால் ஆட்டோமேட்டிக்காக அதுவே இயங்க ஆரம்பித்துவிடும். அவசர சூழலில் மட்டும் டிரைவர் ஸ்டியரிங்கில் கை வைத்தால் போதும்.
இப்படிப்பட்ட நுட்பமான டெஸ்லா காரை அமெரிக்காவை தாண்டி உலகம் முழுக்க சந்தைபடுத்த எலான் மஸ்க் திட்டமித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி எலான் மஸ்க்கை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஏற்கனவே இந்தியாவின் வரி விதிப்பு முறை குறித்து கவலை தெரிவித்த எலான் மஸ்க் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிட்டத்தட்ட 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இது நியாயமற்றது என கூறி இருந்தார். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது.
இதனால், இந்தியாவில் களமிறங்க எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.#Elon #Musk #Tesla #Trump #PM #Modi