பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
திருப்புகழ் - எருவாய் கருவாய் - 272 (திருவீழிமிழலை)
tiruppugaḻ - eruvāy karuvāy – 272 (tiruvīḻimiḻalai)
Purasai E. Arunagiri: https://www.youtube.com/watch?v=7eo3X6ZYR38
Bhavya Hari: https://youtu.be/P4MY9qVOLMs?t=161
A.S. Raghavan: https://www.youtube.com/watch?v=ih1D9l5_IOQ
இப்பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
https://thevaramclass.blogspot.com/2023/04/272-eruvay-karuvay.html
Verses are available in the above URL.
V. Subramanian
====
திருப்புகழ் - எருவாய் கருவாய் - (திருவீழிமிழலை)
------------------------------------------------
( தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா .. தனதான -- Syllabic pattern )
எருவாய் கருவாய் தனிலே யுருவா
.. .. யிதுவே பயிராய் .. விளைவாகி
.. இவர்போ யவரா யவர்போ யிவரா
.. .. யிதுவே தொடர்பாய் .. வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
.. .. யுடனே யவமா .. யழியாதே
.. ஒருகால் முருகா பரமா குமரா
.. .. உயிர்கா வெனவோ .. தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
.. .. முடிமே லிணைதா .. ளருள்வோனே
.. முநிவோ ரமரோர் முறையோ வெனவே
.. .. முதுசூ ருரமேல் .. விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
.. .. சிறுவா திருமால் .. மருகோனே
.. செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
.. .. திருவீ ழியில்வாழ் .. பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - எருவாய் கருவாய் - (திருவீழிமிழலை)
------------------------------------------------
( தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா .. தனதான -- Syllabic pattern )
எருவாய் கருவாய் தனிலே உருவாய்
.. .. இதுவே பயிராய் .. விளைவாகி
.. இவர்-போய் அவராய் அவர்-போய் இவராய்
.. .. இதுவே தொடர்பாய் .. வெறி போல
ஒரு-தாய் இரு-தாய் பல கோடிய தாய்
.. .. உடனே அவமாய் .. அழியாதே,
.. ஒரு-கால் முருகா பரமா குமரா
.. .. உயிர் கா என ஓதருள் தாராய்;
முருகா என ஓர் தரம் ஓது அடியார்
.. .. முடிமேல் இணை-தாள் .. அருள்வோனே;
.. முநிவோர் அமரோர் முறையோ எனவே
.. .. முதுசூர் உரம்-மேல் .. விடும் வேலா
திருமால் பிரமா அறியாதவர் சீர்
.. .. சிறுவா; திருமால் .. மருகோனே;
.. செழு-மா மதில்-சேர் அழகார் பொழில்-சூழ்
.. .. திருவீழியில் வாழ் .. பெருமாளே.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - eruvāy karuvāy - (tiruvīḻimiḻalai)
------------------------------------------------
( tananā tananā tananā tananā
tananā tananā .. tanadāna -- Syllabic pattern )
eruvāy karuvāy tanilē yuruvā
.. .. yiduvē payirāy .. viḷaivāgi
.. ivarpō yavarā yavarpō yivarā
.. .. yiduvē toḍarbāy .. veṟipōla
orutā yirutāy palakō ṭiyatā
.. .. yuḍanē yavamā .. yaḻiyādē
.. orukāl murugā paramā kumarā
.. .. uyirkā venavō .. daruḷdārāy
murugā venavōr taramō daḍiyār
.. .. muḍimē liṇaitā .. ḷaruḷvōnē
.. munivō ramarōr muṟaiyō venavē
.. .. mudusū ruramēl .. viḍumvēlā
tirumāl piramā vaṟiyā davarsīr
.. .. siṟuvā tirumāl .. marugōnē
.. seḻumā madilsē raḻagār poḻilsūḻ
.. .. tiruvī ḻiyilvāḻ .. perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - eruvāy karuvāy - (tiruvīḻimiḻalai)
------------------------------------------------
( tananā tananā tananā tananā
tananā tananā .. tanadāna -- Syllabic pattern )
eruvāy karuvāy tanilē uruvāy
.. .. iduvē payirāy .. viḷaivāgi
.. ivar-pōy avarāy avar-pōy ivarāy
.. .. iduvē toḍarbāy .. veṟi pōla
oru-tāy iru-tāy pala kōḍiya tāy
.. .. uḍanē avamāy .. aḻiyādē,
.. oru-kāl murugā paramā kumarā
.. .. uyir kā ena ōdaruḷ tārāy;
murugā ena ōr taram ōdu aḍiyār
.. .. muḍimēl iṇai-tāḷ .. aruḷvōnē;
.. munivōr amarōr muṟaiyō enavē
.. .. mudusūr uram-mēl .. viḍum vēlā
tirumāl piramā aṟiyādavar sīr
.. .. siṟuvā; tirumāl .. marugōnē;
.. seḻu-mā madil-sēr aḻagār poḻil-sūḻ
.. .. tiruvīḻiyil vāḻ .. perumāḷē.
====