"அதிசயமாய் நடத்தி வந்தவரே" This song is a new tamil Christian worship song
G# MAJOR
அதிசயமாய் நடத்தி வந்தவரே
ஆச்சரியமாய் நடத்தி வந்தவரே
அருமையான காரியங்கள் என் வாழ்வில் செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல இல்ல இல்ல
1.குறைகளையே நிறைவாக்கினீர்
தேவைகளை சந்தித்தீர்
கடினங்கள் வந்த போதும் கசப்புகள் வந்த போதும்
உம் கரம் என்னோடு தாங்கியதே
உம் கரம் என்னை தேற்றியதே (அணைத்ததே)
ரெகொபோத்தை தந்தீர்-2
நான் பலுகும்படி இடம் உண்டாக்கினீர்
2.சஞ்சலங்கள் வந்தபோது சஞ்சலம் நீக்கினீர்
தவிப்பை ஓடச்செய்தீரே
துக்கத்தை சந்தோஷமாக கண்ணீரைக் களிப்பாக
மாற்றின மன்னாதி மன்னவரே
துதி கன மகிமை உமக்கே
3.ஒடுக்கங்கள் வந்தபோது பெருக்கத்தை தந்தீரே
பெருமைக்குரியவரே
நெருக்கங்கள் வந்தபோது விசாலம் தந்தீரே
கேடகத்தால் சூழ்ந்துக்கொண்டீரே
எனக்கு தயை செய்தீரே
4.சில சில நன்மைக்காக
ஏங்கின எந்தன் வாழ்வில்
அநேக நன்மை செய்தீரே
நிறைவேற ஆசைகள் நிறைவேற்றினீர்
மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
என்னை பெருகவே பெருகச் செய்தீர்